ஹூண்டாய் ஐ20 சிவிடி: ஓர் பார்வை

வெர்னா ரக காரில் கிடைப்பது போலான 1.4 லிட்டர் மோட்டார் வகைதான் ஹூண்டாய் ஐ20-யிலும் அமைக்கப்பட்டு உள்ளது

View Photos
ஹுயுன்டாய் ஐ20 சிவிடி ஆட்டோமேட்டிக்

Highlights

  • ஹூண்டாய் ஐ20க்கு, 2018 ஆட்டோமொபைல் கண்காட்சியில் அதிக வரவேற்பு
  • மற்றவற்றை விட மாறுபட்ட ஹூண்டாய் ஐ20
  • தானியங்கி கியர்பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது

ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை கார்களில் முக்கிய மைல்கல்லைப் பதித்த காராகக் கருதப்படுவது ஹூண்டாய் ஐ20.

hyundai i20 cvt automatic

மாருதி சுசூகி, பலேனோ, ஹோண்டா ஜாஸ், வோக்ஸ்வேகன் போலோ என ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிக வரவேற்பை பெற்ற கார்களின் வரிசயில் இந்த ஆண்டு 2018 இந்திய ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியில் அதிகப்படியான வரவேற்பைப் பெற்ற காராக உள்ளது ஹூண்டாய் ஐ20.

 
hyundai i20 cvt automatic


​மற்ற ஹூண்டாய் ஹேட்ச்பேக் வகை கார்களை விட ஹூண்டாய் ஐ20 மாறுபட்டதாக உள்ளது. காரணம், இதன் தானியங்கி கியர் பாக்ஸ். வெர்னா ரக காரில் கிடைப்பது போலான 1.4 லிட்டர் மோட்டார் வகைதான் ஹூண்டாய் ஐ20-யிலும் அமைக்கப்பட்டு உள்ளது. பலதரப்பு பெட்ரோல் என்ஜின் முறையைக் கைவிட முடிவெடுத்துள்ளது ஹூண்டாய்.
 

hyundai i20 cvt automatic


இதையடுத்து தானியங்கி தரத்தில் 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஹூண்டாய் வகைக் கார்களைப் போலவே டார்க் வெளியேற்றியை அமைக்காமல் சிவிடி முறையை ஹூண்டா ஐ20-யில் பயன்படுத்தியுள்ளது ஹூண்டாய் நிறுவனம்.


hyundai i20 cvt automatic


பெட்ரோலால் இயங்கும் ஹூண்டாய் வகைகளில் மட்டுமே தானியங்கி கியர்பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. டீசல் கார்களிலும் ஹூண்டாய் பிரசித்தி பெற்றதாக இருந்தாலும் ஐ20 வகைகளில் டீசல் முறையில் தானியங்கி கியர் பாக்ஸ் முறையை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது ஹூண்டாய். தானியங்கி அல்லாத கார்களில் உள்ளது போலான என்ஜின் வகைகளான 1.2 லிட்டர், 4 சிலிண்டர் என அதிகப்பட்சமாக 115என்.எம் டார்க் வெளிப்படுத்துமாறு பொருத்தப்பட்டுள்ளது.

 
hyundai i20 cvt automatic


​ஹூண்டாய் ஐ20 யின் சிறப்பு அம்சமே அதனது சிவிடி கியர் பாக்ஸ்தான். இதுதான் வண்டியின் சிறப்பான தரத்தை உறுதி செய்யும் அம்சமாக உள்ளது.

 
hyundai i20 cvt automatic


நகர்ப்புறங்களுக்கு ஏதுவான ஸ்டியரிங் வசதி உள்ளது. இதனால் மென்மையான பயணத்துக்கு ஹூண்டாய் ஐ20 உத்திரவாதம் தருகிறது.

0 Comments

hyundai i20 cvt automatic

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.