சென்னையில் கிராண்ட் i10 நியோஸ் தயாரிப்பை துவங்கிய ஹூண்டாய்...!

மாருதி சூசுகி ஸ்விப்ட், போர்ட் பிகோ, நிசான் மிக்ரா, போலோ முதலிய கார்களுடன் இந்த கிராண்ட் i10 நியோஸ் கார் போட்டியிடும்.

View Photos
ஹூண்டாய் மோட்டர் இந்தியா லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ எஸ்எஸ் கிம் இந்த காரை குறித்து பேசினார்

Highlights

  • டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் இந்த கார் வருகிறது
  • ஆறு வண்ணங்களில் இந்த கார் வருகிறது
  • முன்பதிவிற்கான தொகை 11,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தங்களது புது காராக கிராண்ட் i10 நியோஸ் கரை சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவில் இந்த கார் ஆகஸ்ட் 20, 2019 யில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த காரின் தயாரிப்புகளை துவங்கியுள்ளது ஹூண்டாய். சென்னையில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. முதல் கிராண்ட் i10 நியோஸ் கார் தயாரிக்கப்பட்டுவிட்டது.

ஐரோப்பா மார்கெட் முன்பாக இந்தியாவில் தான் இந்த கார் முதலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சர்வதேச மார்கெட்டில் i10 என்றும் இந்தியா மார்கெட்டில் கிராண்ட் i10 நியோஸ் எனவும் இந்த கார் அழைக்கப்படவுள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. முன்பதிவிற்கான தொகை 11,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

m8b364ik

அட்டகாசமான லுக்கை பெற்றுள்ளது இந்த கார்

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1,2 லிட்டர் CRDi டீசல் ஆகியவை இந்த காரில் உள்ளது. இந்த கார் BS6 க்கு ஏற்றது போல் இருக்கும் என எண்ணப்படுகிறது. ஐந்து ஸ்பிட் மானுவல் பெற்றுள்ள இந்த காரில் AMT வசதியும் கிடைக்கும். ஆறு வண்ணத்தில் இந்த கார் கிடைக்க உள்ளது.

மெக்கானிக்கலாக பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வரும் இந்த காரில் 10 வகைகள் உள்ளன. பெட்ரோலில் ஏழு வகையும் டீசலில் மூன்று வகைகளும் கிடைக்கவுள்ளன. பெட்ரோல் வகை கார் தான் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என எண்ணி பெட்ரோல் வகையில் ஏழு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.

e4q5msd4

இந்த கார் ஆகஸ்ட் 20 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது

இந்த புது காரில் ஹூண்டாயின் பிரத்யேக ‘காஸ்கேடிங் கிரில்' பொருத்தப்பட்டுள்ளது. உப்புறம் அதிக இடமுள்ளது. காபினில் பிளாக் மற்றும் பீஜ் உள்ளது. ஏபிஎஸ், இரண்டு ஏர்பேக், ஆட்டோமெடிக் கிளைமேட் கண்ட்ரோல் முதலியனவை இந்த காரில் உள்ளது. அது இந்த காருக்கு ஓர் ஸ்போட்ஸ் லுக் தருகிறது. வென்யூ தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் தயாரிக்கப்படுகிறது.

0 Comments

இந்த காரின் தயாரிப்பை குறித்து ஹூண்டாய் மோட்டர் இந்தியா லிமிடெட் எம்டி மற்றும் சிஇஓ எஸ்எஸ் கிம் கூறுகையில், ‘ஹூண்டாய் நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்கும் இது ஓர் மகிழ்சியான தருணம். 2.7 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள i10 பிராண்டானதுஇந்தியாவில் வெற்றிகரமான கார்களில் ஒன்றாகும். ஹாட்ஸ்பேக் கார் பிரிவில் கிராண்ட் i10 நியோஸ் காரை அறிமுகம் செய்வதன் மூலம் மேலும் ஓர் சாதனையை நாங்கள் படைத்துள்ளோம். இந்த கார் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும்' என்றார். மாருதி சூசுகி ஸ்விப்ட், போர்ட் பிகோ, நிசான் மிக்ரா, போலோ முதலிய கார்களுடன் இந்த கிராண்ட் i10 நியோஸ் கார் போட்டியிடும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.