வெளியானது Hyundai Tucson காரின் புதிய வெர்ஷன் - விலை மற்றும் பிற முக்கிய விவரங்கள்!

language dropdown

மின்னணு முறையில் முன்புற இருக்கைகளை மாற்றியமைக்கும் வசதியைக் கொடுத்துள்ளது ஹூண்டாய்.

expand View Photos
2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் டக்சன் சந்தைக்கு வர உள்ளது.

Highlights

  • 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானது புதிய டக்சன்
  • நிறைய அம்சங்களைப் பெற்றுள்ளது புதிய டக்சன்
  • 2.0 லிட்டர் இஞ்சின் மூலம் இந்த கார் இயங்கும்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இறுதியாக டக்சன் எஸ்யூவி-யின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த காரை கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது ஹூண்டாய். இந்த புதிய காரின் விலை 22.3 லட்ச ரூபாயில் தொடங்குகிறது. 27.03 லட்சத்தில் வாகனத்தின் டாப் எண்டு கிடைக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா காருக்கு சற்று மேலே இந்த புதிய டக்சனின் விலை உள்ளது. பல புதிய மற்றும் அட்டகாசமாக அப்டேட்களை இந்த வாகனம் பெற்றுள்ளது. இதுவரை ஹூண்டாய் நிறுவனம், சுமார் 65 லட்சம் டக்சன் கார்களை உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த புதிய ஹூண்டாய் காரும், ‘கனெக்டெட்' அம்சத்துடன் வந்துள்ளது. 

Hyundai Tucson Facelift 2.0 Petrol 6AT 2.0 Diesel 8AT
Variants GL (O) GLS GL (O) GLS GLS 4WD
Prices ₹ 22.3 Lakh ₹ 23.52 Lakh ₹ 24.35 Lakh ₹ 25.56 Lakh ₹ 27.03 Lakh
dt8tjims

புதிய பம்பர் மற்றும் விளக்குகள் டிசைனைப் பெற்றுள்ளது டக்சன்

முதன் முதலாக டக்சன் கார், கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது. தற்போது வந்திருக்கும் ஃபேஸ்லிஃப்ட்படி, முன் பக்க கிரில் டிசைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரில் பெரிதாகவும் அசத்தலாகவும் உள்ளது. புதிய L டிசைன் எல்ஈடி டிஆர்எல் டிசைனுக்கு ஏற்றாற் போல ஹெட்லாம்ப் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குக்கு ஏற்றாற்போல பம்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் எரிபொருள் நிரப்பும் கேப்பில் மாற்றமும், புதிய அலாய் சக்கரங்களும் வருகின்றன. வாகனத்தின் பின் பக்கம், புதிய எல்ஈடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

காரின் உட்பறத்திலும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளது 2020 டக்சன். லெதர் சீட்கள், பெரிய மற்றும் அதிக வசதிகள் கொண்ட டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே அம்சங்கள் கூடுதல் மதிப்பைக் கொடுக்கின்றன. இந்த சிஸ்டம் மூலம் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவைகளை கனெட்க் செய்ய முடியும். 360 கோண கேமராவையும் பெற்றுள்ளது டக்சன். இதைத் தவிர காரை ஸ்டார்ட் அல்லது ஸ்டாப் செய்ய ஏதுவாக ஹூண்டாய் ப்ளூலிங்க் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உள்ளே இருக்கும் வெப்பச் சூழலை நிர்ணயிப்பது, கதவை லாக் அல்லது அன்லாக் செய்வது, வாய்ஸ் மூலம் வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவைகளைச் செய்ய முடியும். 

eaql2aa8

பெரிய டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் முன்புற இருக்கைகளை மாற்றியமைக்கும் வசதியைக் கொடுத்துள்ளது ஹூண்டாய். அதுமட்டுமல்லாமல் பானோரோமிக் ரூஃப், டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் கிடைக்கப் பெறுகின்றன. 

2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் டக்சன் சந்தைக்கு வர உள்ளது. பிஎஸ்6 பெட்ரோல் இன்ஜின், 150 பிஎச்பி மற்றும் 192 Nm டார்க் பவரை வெளியிடும். அதேபோல டீசல் இன்ஜின் 182 பிஎச்பி மற்றும் 400 Nm பவரைக் கொடுக்கும். பெட்ரோல் வெர்ஷன் காரில் 6 வகை ஸ்பீடு கொண்ட ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும், டீசல் வெர்ஷனில் 8 வகை ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் இருக்கும். 

grd2r1i4

காரின் பக்கவாட்டிலும், பின் புறத்திலும் மாற்றங்களைப் பெற்றுள்ளது டக்சன்

0 Comments

டக்சனின் டாப் எண்டு டீசல் வகை, 4 வீல் டிரைவ் வசதியுடன் வருகிறது. அதற்கு கீழ் உள்ள மாடல்கள், முன் சக்கரங்களுக்கு மட்டும் பவரைக் கடத்தும். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஜீப் காம்பஸ், ஸ்கோடா கரோக் உள்ளிட்ட கார்களுடன் இந்த புதிய டக்சன் போட்டியிட உள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.