323 மில்லியன் டாலரை வரியாக செலுத்தும் டெஸ்லா நிறுவனம்...!

சீனாவில் தயாரிப்பு ஆலையை துவங்குவதன் மூலம் டெஸ்லாவிற்கு சீனாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரியானது குறைய வாய்ப்புள்ளது.

View Photos
அடுத்த 12 மாதங்களில் 5 லட்சம் கார்களை சாங்காய் தயாரிப்பு ஆலையில் தயாரிக்க திட்டம் வைத்துள்ளது டெஸ்லா

எலக்ட்ரிக் வாகனங்களின் பிதாமகனான எலான் மஸ்க்யின் டெஸ்லா நிறுவனமானது சீனாவில் தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது. அமெரிக்கா நிறுவனமான டெஸ்லா, சீனாவில் தயாரிப்பு ஆலை அமைப்பது சற்று ஆச்சர்யமானதாகும்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம், ஆண்டுதோறும் 2.23 பில்லியன் யூயன் (323 மில்லியன் டாலர்) வரி பணமாக சீனாவிற்கு செலுத்த சம்மதித்துள்ளது. சாங்காய்யில் எலக்ட்ரிக் வாகன ஆலை கட்டவுள்ள டெஸ்லா, 2023 ஆண்டு இறுதிக்குள் வருட வரிப்பணத்தை ஜெனரேட் செய்ய வேண்டும் இல்லையேல் அந்த இடத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெஸ்லா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 14.08 பில்லியன் யூயன் (2 பில்லியன் டாலர்) முதலீடு தொகையாக செலவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் தயாரிப்பு ஆலையை துவங்குவதன் மூலம் டெஸ்லாவிற்கு சீனாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரியானது குறைய வாய்ப்புள்ளது. உலகில் அதிக எலக்ட்ரிக் கார்கள் உள்ள நாடு சீனாவாகும்.

0 Comments

அடுத்த 12 மாதங்களில் 5 லட்சம் கார்களை சாங்காய் தயாரிப்பு ஆலையில் தயாரிக்க திட்டம் வைத்துள்ளது டெஸ்லா. ‘நாங்கள் செலுத்த இருக்கும் வரி பணம் மற்றும் முதலீடு ஆகியவற்றை எங்களது தயாரிப்பு கார்கள் ஈடு செய்யும் என நம்புகிறோம்' என டெஸ்லா தெரிவித்திருந்தது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.