நீக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள்; இந்தியாவில் ஜூன் மாத எரிபொருள் தேவை எப்படி இருந்தது?

language dropdown

அதேபோல பெட்ரோல் விற்பனை ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது, 134 சதவீதம் அதிகரித்துள்ளது.

expand View Photos
தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருட்களான நாப்தா, பிடுமென் உள்ளிட்டவைகளின் தேவையும் ஜூன் மாதம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு தழுவிய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் முதல் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்ற மாதத்திற்கான எரிபொருள் தேவையும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், சென்ற 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை குறைந்தது. மே மாதம், எரிபொருள் தேவையான சற்று உயரந்தது. தற்போது ஜூன் மாதத்தில் அது மேலும் உயர்ந்துள்ளது. 

ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளானது, 16.29 மில்லியன் டன் விற்றுள்ளன. இது மே மாதத்தைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7.9 சதவீத வீழ்ச்சி உள்ளது. 

ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது எரிபொருள் தேவையானது சுமார் 64 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களில் ஐந்தில் இரண்டு பங்கு டீசல் ஆகும். அது மட்டும் ஜூன் மாதத்தில் 6.30 மில்லியன் டன் விற்றுள்ளது. 

db1vtue

ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளானது, 16.29 மில்லியன் டன் விற்றுள்ளன. 

ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது எரிபொருள் தேவையானது சுமார் 64 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களில் ஐந்தில் இரண்டு பங்கு டீசல் ஆகும். அது மட்டும் ஜூன் மாதத்தில் 6.30 மில்லியன் டன் விற்றுள்ளது. 

அதேபோல பெட்ரோல் விற்பனை ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது, 134 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 2.28 மில்லியன் டன் பெட்ரோல் நாடு முழுவதும் விற்றுள்ளது. 

இதைத் தவிர, தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருட்களான நாப்தா, பிடுமென் உள்ளிட்டவைகளின் தேவையும் ஜூன் மாதம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. நாப்தா விற்பனை ஜூன் மாதத்தில் 18.2 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பிடுமென் விற்பனை 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸுக்காக போடப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதனால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் எரிபொருட்களுக்கான தேவை மெல்ல அதிகரித்து வருகின்றன. 

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசிலுக்குப் பின்னர் 3வது இடத்தில் உள்ளது இந்தியா. கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 20,000-ஐக் கடந்துள்ளது. 

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.