சைலென்டாக உருவாகிறதா டிரையம்ப் டேடோனா 765?

மோட்டோ 2 என்ஜினின் சோதனை, ஸ்பெயினில் நடந்து வருவதாக டிரையம்ப் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது

View Photos

டிரையம்ப் நிறுவனம், 2019-ம் ஆண்டுக்கான மோட்டோ 2 என்ஜினை ஒருபுறம் சோதித்து வரும் நிலையில், மறுபுறம் சைலென்டாக டேடோனா 765 பைக்கை சோதிக்கிறதா என்ற சந்தேகத்துடன் கூடிய கேள்வி எழுந்துள்ளது.

மோட்டோ 2 என்ஜினின் சோதனை, ஸ்பெயினில் நடந்து வருவதாக டிரையம்ப் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. கே.டி.எம், கேலெக்ஸ் மற்றும் என்.டி.எஸ் நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த சாசிஸ்களில் மோட்டோ 2 என்ஜினை சோதித்து வருகின்றன.

பைக்

triumph moto2 prototype

2019 மோட்டோ 2 சாம்பியன்ஷிப்பில் இந்த புதிய டிரையம்ப் என்ஜின் கொண்ட பைக்குகள் தான் களம் இறக்கப்படும். இந்த புதிய என்ஜின் சில மாற்றங்களோடு வருகிறது. சிலிண்டர் ஹெட், டைட்டானியம் வால்வுகள், உறுதியான ஸ்பிரிங்ஸ், ட்யூன் செய்யக் கூடிய ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ 2 என்ஜின் டெஸ்டிங்கின் போது, மற்றொரு பைக் டெஸ்டிங் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. டிராக்கை சுற்றி வந்து கொண்டிருந்தது அந்த பைக்கில் 765 என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அது டிரையம்பின் டேடோனா 765 ஆக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், டிரையம்ப் நிறுவனம் மோட்டோ2 என்ஜினை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட டெஸ்டிங் மியூல் என்று கூறி மெளனம் சாதிக்கிறது.

triumph moto2 prototype

டேடோனா 675 கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகான அறிமுகமாக இந்த பைக் இருக்குமா என்பதால் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, புதிய மாடல் பைக்கின் இறுதி வடிவத்தை டிரையம்ப் உருவாக்கி வருகிறது என்றால் அதை அந்நிறுவனம் சோதிக்கிறதா? ஒருவேளை தயாரிப்புக்கு வந்துவிட்டது என்றால், அதை மோட்டோ 2 என்ஜின் டெஸ்டிங்கோடு, சேர்த்து சோதித்து பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரையம்பின் பேட்ஜ் மற்றும் 765 என்று எழுதப்பட்டிருக்கும் அந்த பைக்கின் பாகங்கள், பொதுவாக சோதனை செய்யப்படும் பைக்குகளில் இல்லாத வகையில் புதிதாக உள்ளது. மோட்டோ 2 என்ஜினை சோதிக்கும் கே.டி.எம், கேலெக்ஸ், என்.டி.எஸ் நிறுவனங்களின் சோதனை மாடல்களில், உள்ள பாகங்கள் முழுமை அடையாத நிலையில் உள்ளன. ஆனால் 765 பைக்கின் பாகங்கள் அனைத்து முழுமை அடைந்து தயாரிப்பு நிலைக்கு முன்னேறியது போல் இருக்கின்றன.

 
triumph moto2 prototype

டேடோனா 765 என்ற மாடல் வருகிறதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், டிரையம்பில் இருந்து நமக்கு கிடைத்த தகவல்கள், டேட்டோனா 765 உருவாகி வருவதாகவும், ஆனால் எப்போது அறிமுகம் ஆகும் என்பது தெரியவில்லை என்றும் கூறுகிறது.

0 Comments

இந்தியா உள்பட உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட டேடோனாவின் அடுத்த மாடல் கூடிய சீக்கிரம் வெளியாகி டேடோனா வெறியர்களை மகிழ்ச்சுபடுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Triumph Rocket 3 R with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.