அதிரடி தள்ளுபடியை அறிவித்த ஜாகுவார் லாண்ட் ரோவர்

ஜனவரி முதல் ஆகஸ்ட் 2018 வரை தயாரிக்கப்பட்ட கார்களுக்கு அதிக அளவில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன

View Photos
7 இலட்சம் முதல் 20 இலட்ச ரூபாய் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது ஜாகுவார் லாண்ட் ரோவர்

ஜாகுவார் லாண்ட் ரோவர் கார் நிறுவனம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ஜாகுவார் லாண்ட் ரோவர் கார்களுக்கு அந்த நிறுவனத்தின் டீலர்கள் 20 இலட்ச ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

ஜாகுவார் லாண்ட் ரோவர் டீலரான ஏஎம்பி மோட்டர்ஸ், லாண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு 7 இலட்ச ரூபாயும் ஜாகுவார் எக்ஸ்ஜேல் காருக்கு 20 இலட்ச ரூபாயும் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

‘ஜனவரி முதல் ஆகஸ்ட் 2018 வரை தயாரிக்கப்பட்ட கார்களுக்கு அதிக அளவில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு குறைந்த அளவில் தள்ளுபடி இருக்கும்' என ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு 7 இலட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புது ஜெனரேஷன் டிஸ்கவரி காரின் விலையில் 12 இலட்ச ரூபாயும், எக்ஸ்எப் செடான் காரின் விலையில் 8 இலட்ச ரூபாயும், எக்ஸ்ஜெல் காருக்கு 20 இலட்ச ரூபாயும் தள்ளுபடி அறிவித்துள்ளது ஜாகுவார் லாண்ட் ரோவர். 

0 Comments

மேலும் படிக்க - ஹோண்டாவின் புது பைக்கின் முன்பதிவு...!!

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.