பாலைவனத்தை தெறிக்கவிட ஒரு வாகனம்... 'ஜீப்' நிறுவனம் அறிவிப்பு!

மழ மழ சாலைகளுக்கு நேரெதிராக இருக்கும் கரடு முரடான இடங்களில் ஜீப் வாகனங்களின் பெர்ஃபார்மன்ஸ் அதகளப்படுத்தும்

View Photos
ஜீப் நிறுனத்தின் கார்

Highlights

  • 2020 ஆம் ஆண்டு இந்த வகை வாகனம் சந்தைக்கு வரும்
  • பாலைவனத்தில் ஓடக்கூடிய வகையில் பிரத்யேக டிசைனை இந்த வாகனம் கொண்டிருக்கும்
  • 5000 முதல் 10,000 டாலர்கள் வரை இந்த ஸ்பெஷல் எடிஷனால் விலை கூடும்

அமெரிக்க வாகன உற்பத்தியாளரான ஜீப் நிறுவனத்தின் தனிச் சிறப்பு, அவர்களின் எஸ்.யூ.வி வகை கார்கள் தான். அதுவும் மழ மழ சாலைகளுக்கு நேரெதிராக இருக்கும் கரடு முரடான இடங்களில் ஜீப் வாகனங்களின் பெர்ஃபார்மன்ஸ் அதகளப்படுத்தும். 

இந்த தனிச் சிறப்புக்காகவே ஜீப் நிறுவன வாகனங்கள் உலக புகழ் பெற்றவையாக இருக்கின்றன. குறிப்பாக, மலை பிரேதசங்களில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனை படுஜோராக இருக்கும். இந்நிலையில், பாலை வனத்தில் கெத்தாக ஓடக்கூடிய ஒரு சிறப்பு எஸ்.யூ.வி வகை வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜீப். 

கார்

பொதுவாக ஜீப் நிறுவனம், `ட்ரெய்ல்ஹாக்' என்று தனது எல்லா வகை வாகனங்களிலும் ஒரு ஸ்பெஷல் எடிஷனை விடும். இது தான் ஒரு குறிப்பிட்ட வகை வாகனத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். இந்நிலையில், பாலை வனத்தில் கெத்தாக ஓடக் கூடிய வாகனங்களுக்கு `டெஸர்ட்ஹாக்' என்ற பெயரில் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது ஜீப். 

0 Comments

இந்த வகை வாகனம், ஃபோர்டு நிறுவனத்தின் ரேப்டர்-க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸர்ட்ஹாக், பாலை வனத்தில் நன்றாக ஓட வேண்டும் என்பதால், பல புதிய டிசைன்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸர்ட்ஹாக் வகையில் முதல் வாகனம் வரும் 2020 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை சிறப்பு வாகனம், அதன் சாதரண எடிஷனை விட ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் டாலர்கள் விலை கூடுதலாக இருக்கும் என்று தகவல் சொல்லப்படுகிறது.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Jeep Grand Cherokee with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.