ஜீப் காம்பஸ் காருக்கு அசத்தலான அறிவிப்பு

ஜுன் 1,2019 பின் இந்த விலைகள் உயர்த்தப்படும்

View Photos
எப்சிஏ, மோப்பர் கேர் ப்ரோகிராம் கீழ் உத்திரவாதம் அறிவிக்கப்பட்டுள்ளது

Highlights

  • எப்சிஏ, மோப்பர் கேர் ப்ரோகிராம் ஜீப் காம்பஸ் காருக்கு அறிமுகம் ஆகிறது
  • ஜீப் காம்பஸ் ஸ்போர்ட்ஸ் காருக்கு 25,000 ரூபாய் மதிப்பில் அறிமுகம் ஆகிறது
  • எரிபொருள், பேட்டரி, எலக்ட்ரிக்கல் முதலியவற்றுக்கு உத்திரவாதம் வழங்குகிறது

அறிமுகம் செய்த போது அதிக எதிர்பார்ப்பை கிளப்பியது ஜீப் காம்பஸ் கார். தற்போது, இந்த ஜீப் காம்பஸ் காருக்கு கூடுதல் உத்திரவாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்சிஏ, மோப்பர் கேர் ப்ரோகிராம் கீழ் ஜீப் காம்பஸ் காருக்கு ஐந்து ஆண்டுகள் கூடுதல் உத்திரவாதம் வழங்கியுள்ளது. இதனை தற்போதைய ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

கார்

இந்த  திட்டம், ஜீப் காம்பஸ் ஸ்போர்ட்ஸ் வகை காருக்கு 25,000 ரூபாய் மதிப்பிலும் ஜீப் காம்பஸ் லாங்கிடியூட் வகை காருக்கு 28,000 ரூபாய் மதிப்பிலும் டாப் மாடல் ஜீப் காம்பஸ் காருக்கு 32,000 ரூபாய் மதிப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜுன் 1, 2019 -க்கு பின் இந்த விலைகள் உயர்த்தப்படும்.

எப்சிஏ இந்தியாவின் தலைவர் கேவின் ப்ளைன் கூறுகையில் ‘ஜீப் காம்பஸ் போன்ற தரமான காருக்கு மோப்பர் உத்திரவாதம் வழங்குவதில் எங்களுக்கு பெருமையே. இந்திய மக்களுக்கு மோப்பர் உத்திரவாதத்தை முழுவதுமாக அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.

0 Comments

எரிபொருள் மற்றும் பேட்டரி, எலக்ட்ரிக்கல், ப்ரேக்டவுன், டாக்ஸி முதலிய பல சேவைகளை இந்த மோப்பர் உத்திரவாதம் வழங்குகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Jeep Wrangler Unlimited with Immediate Rivals