இந்தியாவில் அறிமுகமாகும் ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக்...!!! முழு விவரங்கள் உள்ளே..!!!

மெக்கானிக்கலாக ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக்கில் 2.0 லிட்டர் மல்டிஜெட் II உள்ளது

View Photos
எஸ்யூவி பிரிவை சேர்ந்தது இந்த கார்

கார்களின் முக்கிய பிரிவான எஸ்யூவி –யில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் கார் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது வரும் ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம், இந்தியாவில் ஜூலை 2017 –யில் ஜீப் காம்பஸ் காரை அறிமுகம் செய்தது. தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் காரானது டீசல் ஆட்டோமெடிக் ஆகும்.

jeep compass trailhawk india launch in 2018

இந்த புது கார் டீசல் வகையை சேர்ந்தது.

ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் காருக்கான முன்பதிவு தற்போது நடைப்பெறுகிறது. அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும். ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் கார் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்வதாக இருந்தது. ஆனால் BS 6 வகைக்கு ஏற்ப வடிவமைத்து இந்த ஆண்டு தான் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் இருக்கும். அவை 225/60 R17 வகையாகும். அவற்றின் பேட்ஜ்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். கிரீல் கருப்பு நிறத்தில் இருக்கும்.

உட்புறத்தில் கேபின் கருப்பு நிறத்தில் உள்ளது. மலை ஏற்றத்திற்கான புது கட்டுபாடுகள் உடன் இந்த கார் வருகிறது. ஆறு பார்க்கிங் சென்சார்களை இந்த கார் பெற்றுள்ளது.

0 Comments

மெக்கானிக்கலாக ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக்கில் 2.0 லிட்டர் மல்டிஜெட் II உள்ளது. இதுவே 171 bhp மற்றும் 350 Nm உட்ச டார்க்கை தருகிறது. இந்த காரில் 9 ஸ்பீட் ஆட்டோமெடிக் டிரான்ஸ்மிஷன் புதியாக உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.