இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கு இது ஒரு சோதனை காலம் தான். டாடா, மாருதி என பிரபல கார் நிறுவனங்கள் ஜூன் மாதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இருப்பினும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறூவனமானது வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஜூன் 2019 ஓப்பிடும் போது ஜூன் 2020 யில் 4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மஹிந்திரா மற்றும் மஹிந்திரா. சென்ற ஆண்டு ஜூன் மாதம் 18,137 யூனிட் பாசஞ்சர் வாகனங்களை விற்ற மஹிந்திரா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 18,826 பாசஞ்சர் வாகனங்களை விற்றுள்ளது.
சென்ற ஆண்டு மஹிந்திரா மரஷோ அறிமுகம் செய்யப்பட்டதுபாசஞ்சர் கார் மற்றும் வேன்கள் 36 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தாலும் கூட யூவி வாகனங்கள் 8 சதவிகிதம் வளார்ச்சியை பதிவு செய்தது.
இது குறித்து எம்&எம் யின் விற்பனை பிரிவின் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், ‘பாசஞ்சர் வாகன பிரிவில் மார்கெட் வீழ்ச்சியில் தான் உள்ளது. மஹிந்திராவில் பாசஞ்சர் வாகன பிரிவில் 4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்தது மகிழ்ச்சியையே தருகிறது. யூவி வாகன பிரிவில் 8 சதவிகிதம் வளர்ச்சியை பதுவு செய்துள்ளோம். மேலும் ஜூன் 2019 யில் நாங்கள் கமர்ஷியல் வாகன பிரிவில் சானல் இன்வெண்டரியை சரி செய்தோம்' என்றார்.
சென்ற ஆண்டு ஆல்ட்டுராஸ் ஜி4 காரை அறிமுகம் செய்தது மஹிந்திரா.இந்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 அறிமுகம் செய்யப்பட்டது. அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மே மாதத்திலையே 26,000 புக்கிங் பெற்றது இது. சென்ற ஆண்டு மஹிந்திரா மரஷோ அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் 19,000 மரஷோ யூனிட்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் சென்ற ஆண்டு ஆல்ட்டுராஸ் ஜி4 காரை அறிமுகம் செய்தது மஹிந்திரா.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
