இந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

language dropdown

இந்தியாவில் கவஸாகி வல்கன் S க்ரூஸியரின் விலை 5.79 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஸ்4 இன்ஜினுடன் ஒப்பிடுகையில் இது 30 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்

expand View Photos
பிஎஸ் 6 இன்ஜின் உடன, புதிய கலர் வேரியண்டில் அறிமுகமாகியுள்ள கவாஸாகி வல்கன் எஸ்

Highlights

  • The BS6 Kawaski Vulcan S is priced at Rs. 5.79 lakh (ex-showroom)
  • The motorcycle gets a new colour scheme as well
  • The specifications of the motorcycle are more or less same as before

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் புதிதாக கவாஸாகி வல்கன் S பிஎஸ்6 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

இந்தியாவில் பிஎஸ் 6 இன்ஜின் உமிழ்வுக்கு இணையாக தற்போது புதிதாக கவாஸாகி வல்கன் S பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த பிஎஸ் 4 ரக பைக்கை விட இது 30 ஆயிரம் ரூபாய் அதிக விலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது,கவாஸாகி வல்கன் S பைக்கின் விலை 5.79 லட்சம் ரூபாய் ஆகும்.

பிஎஸ் 6 இன்ஜினைத் தவிர்த்துப் பார்க்கும் போது, நல்ல மெட்டாலிக் கிரே கலரில், சிவப்பு மற்றும் கருப்பு டெக்ரேட் ஸ்டிக்கர்களுடன் வருகிறது. இந்த ஒரே கலரில் மட்டும் தான் பைக் விற்பனைக்கு வருகிறது. இருப்பினும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன 

uu7ilrmg

(பிஎஸ்6 கவாஸாகி வல்கன் வெளிப்படுத்தும் சக்தி மற்றும் திறனானது அப்படியே பிஎஸ்4 ரகத்தைப் போல் உள்ளது)

பிஎஸ்6 தரத்திற்கு இணையாக 649 cc இன்ஜின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 60bhp சக்தியையும், 63nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸூம் உள்ளது. வாகனத்தின் மொத்த எடை 235 கிலோ ஆகும். பெட்ரோல் கொள்கலனுக்காக 14 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 

0 Comments

நல்ல உயர்த்தப்பட்ட ஹேண்டில்பாரும், கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஃபுட்பெக்ஸூம் உள்ளன. இதன் சீட் அமைப்பு நல்ல சொகுசாக அமர்ந்து ஓட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 300மிமீ கொண்ட இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் 250மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.