15 .30 லட்சம் விலைக்கு இந்தியாவிற்கு வரும் கவாசகி Z900RS

முந்தைய மாடலை விட 300 மிமீ அகலமாகவும், 65 மிமீ உயரமாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

View Photos

ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனமான கவாசகி Z900RS இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் கருப்பு வண்ணத்தில் அந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பைக்கின் விலை 15 லட்சத்து 30 ஆயிரம்(எக்ஸ் ஷோரூம்). புதிய கருப்பு வண்ணத்தைத் தவிர, கேண்டிடோன் ப்ரவுன் மற்றும் கேண்டிடோன் ஆரஞ்சு வண்ணத்திலும் கிடைக்கிறது. 1970 வெளியான Z900 போல ரெட்ரோ ஸ்டைலில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

kawasaki z900rs

முந்தைய மாடலை விட 300 மிமீ அகலமாகவும், 65 மிமீ உயரமாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புதிய எல்.சி.டி டிஸ்ப்ளே இடம் பெற்றுள்ளது. 900சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், 109 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் வகையில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

0 Comments

இந்த பைக்கில் கவாசை ட்ராக்சன் கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்த பைக், ட்ரையம்ப் போனவில் டி120,  டிரையம்ப் த்ரக்ஷ்டனோடு போட்டி போடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.