Kia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது!

language dropdown

செப்டம்பர் 18 ஆம் தேதி கியா சொனெட் கார் அறிமுகமாகிறது. இது சப்காம்பெக்ட் மார்க்கெட்டில் ஒரு மிகப்பெரிய உருவாக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

expand View Photos

Highlights

  • The Sonet will be Kia's first sub-4 metre SUV
  • The Sonet will be a connected car
  • It will be the most affordable car from Kia in India

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கியா சொனெட் சொகுசு காரின் அறிமுக தேதி விவரங்கள் வெளியானது. 

கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் காரின் முன்பதிவு, கடந்த மாதம் தொடங்கியது. முதல் நாளில் மட்டும் சுமார் 6,500க்கும் அதிகமானோர் கியா சொனெட் வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர். 

இந்த நிலையில், தற்போது கியா சொனெட் காரின் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் வந்துள்ளன. அதன்படி, செப்டம்பர் 18 ஆம் தேதி கியா சொனெட் கார் அறிமுகமாகிறது. இது சப்காம்பெக்ட் மார்க்கெட்டில் ஒரு மிகப்பெரிய உருவாக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கியாவின் புத்தம் புதிய சொனெட் காரானது, மற்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரேஸ்ஸா, டாட்டா நெக்ஸான், ஃபோர்டு எகோஸ்போர்ட், மஹிந்திரா XUV300 ஆகிய கார்களுக்குப் போட்டியாக அமையும். 

irdjapdc

கியா சொனெட்டில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 211 மிமீ ஆக உள்ளது

இணையத்தில் கசிந்த தகவலின்படி, கியா சொனெட்டில் பெட்ரோல் இன்ஜின் 2, டீசல் இன்ஜின் 2 என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் உள்ளன. டீசலைப் பொருத்தவரையில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இரு வெவ்வேறு ட்யூன்களில் வருகிறது.  இந்த மூன்று இன்ஜின்கள் உட்பட சில பாகங்கள் ஹூண்டாய் வென்யூவிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. 

p70lg3cc

இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 6300 rpm இல், 82 bhp சக்தியையும், 4200 rpm இல் 115 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. HTE, HTK மற்றும் HTK+ வேரியன்டுகள் உடன் வழங்கப்படுகிறது.

0 Comments

இதே போல், 1 லிட்டர் டர்போசார்டு பெட்ரோல் இன்ஜின் 6000 rpm இல் 118 bhp சக்தியையும், 1500-4000 rpm வரையில்  172 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் இன்டலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன், HTK+, HTX, HTX+, and GTX+ ட்ரிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 ஸ்பீடு DCT ட்ரான்ஸ்மிஷ ஆப்ஷனுடன் HTK+, GTX+ ட்ரிம்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News