Kia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது!

language dropdown

கியா சொனெட் ஜிடி லைன் மற்றும் டெக் லைன் என இரண்டு ஆப்ஷனகளில் வருகின்றன.

expand View Photos
ஆகஸ்ட் 7 ஆம் தேதி சோனெட் சப் காம்பாக்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகமாகிறது

Highlights

  • The Kia Sonet is rumoured to be offered in both GT Line & Tech Line trims
  • The Kia Sonet will share its platform & powertrain options with the Venue
  • The Kia Sonet subcompact SUV will make its debut on August 7

கார் பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கியா சொனெட் மாடல் வரும் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் கியாவின் மூன்றாவது மாடல் இந்த சொனெட் எஸ்யூவி கார் ஆகும். இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் போன்றே, இதுவும் இரண்டு ஆப்ஷனகளில் வருகின்றன. அவை ஜிடி லைன் மற்றும் டெக் லைன் ஆகும்.  

ஜிடி லைனில் ஜிடிகே, ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் பிளஸ் என மூன்று வேரியன்டுகள் வருகின்றன. இதே போல் டெக் லைனில் ஹெச்டிஇ, ஹெச்டிகே, ஹெச்டிஎக்ஸ் மற்றும் ஹெச்டிஎக்ஸ் பிளஸ் என நான்கு வேரியன்டுகளில் வருகின்றன.

இந்த கார் தற்போது 25 ஆயிரம் ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்படுவதாகவும், செப்டம்பர் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் சில டீலர்கள் தெரிவிக்கின்றனர். 

o54jbdt8

கியா சொனெட் மாடல் மொத்தம் 7 வேரியன்டுகளில் வருகின்றன. 

ஹூண்டாய் வென்யூ காரில் உள்ள சிறப்பம்சங்கள் போலவே கியா சொனெட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 6 மேனுவல் ஸ்பீடு கொண்ட டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

7ug2m1no

காரின் பின்புறத்தில் விண்ட் ஷீல்டு, ரக்டு ரியர் பம்பர் உள்ளன

கியா சொனெட்டின் டெக் லைன் வேரியன்டில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளன. அதே நேரத்தில் ஜிடி லைன் ட்ரிம்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. மேலும், ஸ்போர்ட்டியர் ரக தோற்றத்தில், சிவப்பு நிறத்தில் கண்னைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது. உட்புறத்தில் சிவப்பு காண்டரஸ்டில், கருப்பு இன்டரியர் உள்ளது. அண்மையில் ஹூண்டாய் நிறுவனமும் தனது வென்யூ காருக்காக ஸ்போர்ட் டிரிம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

1titec6o

கியா சொனெட்டில் 10.25 இன்ச் தொடுதிரை கொண்ட UVO வசதி உள்ளது

கியா சொனெட்டின் புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது, காரின் முன்பக்கதில் எல்இடி ஹெட்லைட், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. பின்புற வைஃபைர், சில்வர் ரூஃப் ரெயில், அலாய் வீல்கள் உள்ளன. 

0 Comments

Source: TeamBHP

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News