ஜெனிவா ஷோவில் கியா மோட்டர்ஸின் புது எலக்ட்ரிக் கார்...!

கியா மோட்டர்ஸ் தங்களது நிறுவனத்தின் புது எலக்ட்ரிக் மாடல் காரை அறிமுகம் செய்யவுள்ளது

View Photos
இந்த கார் மார்ச் 5, 2019 அன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

2019 ஜெனிவா சர்வதேச மோட்டர் ஷோ மார்ச் மாதம் நடக்கவுள்ளது. இந்த மோட்டர் ஷோவில் பல முக்கிய கார்களை பல பிரபல கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன. 

கியா மோட்டர்ஸ் தங்களது நிறுவனத்தின் புது எலக்ட்ரிக் மாடல் காரை அறிமுகம் செய்யவுள்ளது. ஐரோப்பிய சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார், ஃப்ராண்க்பார்ட் ஆலையில் டிசைன் செய்யப்பட்டது. இது மார்ச் 5, 2019 அன்று இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

கார்

கியா மோட்டர்ஸ் ஐரோப்பியாவின் டிசைன் பிரிவு துணைத் தலைவர் க்ரிகோரி க்கியோமி கூறுகையில், ‘மக்களை கவர்ந்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே கார்களின் முக்கிய குறிக்கோள். அதனால் எலக்ட்ரிக் கார்களிலும் அதைக் கொண்டு வந்துள்ளோம்' என்றார்.

இந்த புதிய காரின் டீசரில், எல்.இ.டி லைட், இரு கேமராக்கள், கவர்ந்திழுக்கும் டிசைன் இருப்பது தெரிகிறது.

0 Comments

'இந்த காரை டிசைன் செய்யும் போதே ஒரு முடிவை நாங்கள் எடுத்தோம். ஏனைய எலக்ட்ரிக் கார்களில் இருந்து எங்கள் கார் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக முற்றிலும் புதுமையான டிசைன்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம்' என க்கியோமி மேலும் தகவல் தெரிவித்தார்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Kia Seltos with Immediate Rivals