பஞ்சாப் அரசுக்கு 3,000 முகக் கவசங்களை வழங்கியது மஹிந்திரா! 

மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டர்ஸ், நன்கொடையளித்த முகக் கவசங்கள் நிறுவனத்தின் மொஹாலி ஆலையில் தயாரிக்கப்பட்டன. அதை பஞ்சாபின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து பெற்றார்.

மஹிந்திரா முகம் கவசங்களைப் பெறும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து மற்றும் பிற அதிகாரிகள் expand View Photos
மஹிந்திரா முகம் கவசங்களைப் பெறும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து மற்றும் பிற அதிகாரிகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவும் வகையில், மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டர்ஸ், 3,000 முகக் கவசங்களை பஞ்சாப் அரசுக்கு வழங்கியது. மொஹாலியில் உள்ள ஸ்வராஜ் டிராக்டர்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் (PPE) அனைத்தும், பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து பெற்றார். இந்த செய்தியை state's bureau of investment promotion, Invest Punjab ட்வீட் செய்த நிலையில், "நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்" என்ற மேற்கோளுடன் மஹிந்திரா குழுமத் தலைவர், ஆனந்த் மஹிந்திரா ரீ-ட்வீட் செய்துள்ளனர். 

Also Read: Mahindra To Make Medical Shields Out Of Windshields At Its Michigan Plant In The US

மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்புக்காக, கண்டிவாலி ஆலையில் 500 யூனிட் ஃபேஸ் ஷீல்டுகளை நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. சமீபத்தில், Mahindra, மத்தியப் பிரதேச மாநிலம் பிதாம்பூர் ஆலையில் முகக் கவசங்களை தயாரிக்கத் தொடங்கியது. இதில் தற்போது 5,000 யூனிட்களை உற்பத்தி செய்ய போதுமான பொருள்களைக் கொண்டுள்ளது. 

Also Read: Coronavirus Threat: Mahindra Begins Assembly Of Face Shields

214jv8rs
பாதுகாப்பு முகம் கவசம் ஃபோர்டு பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவசரகால ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும்.

முதல் 50,000 முகக் கவசங்களை இந்தியா முழுவதும் இலவசமாக வழங்குவதாக, மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவன் கோயங்கா அறிவித்தார். தற்போது இந்தியாவில் பரிசோதனையில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலிவு வென்டிலேட்டர்களை தயாரிப்பதில் மஹிந்திரா தீவிரமாக செயல்படுகிறது. 

b1nu9ih
COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு மஹிந்திரா சானிடைசர்களை தயாரிப்பதில் இறங்கியுள்ளது
0 Comments

நிறுவனம், உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு உணவு மற்றும் உணவு / தானிய பாக்கெட்டுகளை வழங்குவதற்காக, ஏற்கனவே இந்தியாவில் 10 வெவ்வேறு இடங்களில் தனது சமையலறைகளைத் திறந்துள்ளது. மஹிந்திரா, சானிடைசர்களையும் தயாரித்து வருகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.