சுறா போன்ற வடிவமைப்பை பெற்ற மஹிந்திரா மராசோ கார் 9.9 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமானது

மஹிந்திராவின் தயாரிப்புகளிலேயே இது மிகப் பெரிய கார். ஆக்ரோஷமான வடிவமைப்பு பெற்றுள்ளது. மராசோ என்றால் சுறா என்று பொருள்.

View Photos

மஹிந்திரா மராசோ காரை இன்று அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இதன் விலை 9.9 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்2, எம்4,எம்6,எம்8 என நான்கு வேரியன்ட்கள் உள்ளன. டாப் எண்ட் மாடலின் விலை 13.90 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மஹிந்திராவின் ஃபிளாக்‌ஷிப் காரான இது, இனோவா கிர்ஸிடா, டாடா ஹெக்ஸா போன்ற கார்களுடன் போட்டியிட இருக்கின்றது.

csmoas6k

மராசோ லிட்டருக்கு 17 கி.மீ மைலேஜ் தருகிறது. புதிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் இந்த மராசோவில் இருக்கிறது. 125பி.எச்.பி பவரை கொடுக்கும் திறன் கொண்டது. 300 என்.எம் டார்க்கும் கொடுக்கிறது. 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இப்போதைக்கு கொடுக்கப்படவில்லை. பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டு வர மஹிந்திரா பணி செய்து வருகிறது. 2020-ம் ஆண்டு பி.எஸ் 6 வகை மாடலாக களம் இருக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திராவின் தயாரிப்புகளிலேயே இது மிகப் பெரிய கார். ஆக்ரோஷமான வடிவமைப்பு பெற்றுள்ளது. மராசோ என்றால் சுறா என்று பொருள். அதற்கு ஏற்றபடி, சுறாவை மையப்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மராசோவின் முன் பகுதியில், குரோம் டூத்ட் கிரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைலட் லைட்களுடன் கூடிய முகப்பு விளக்கு மற்றும் சுறாவின் கண் போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஃபாக் லாம்பும் எல்.இ.டி டிஆர்எல் லைட்டும், சுறாவை பிரதிபலிக்கிறது.

go5bjg6c

மராசோவில் 17 இன்ச் அலாய் வீல் உள்ளது. பின் பக்க எல்.இ.டி லைட் சுறாவின் பின் இறகுகள் போல வடிவமைப்பை பெற்றுள்ளன. மஹிந்திரா மராசோ 7 மற்றும் 8 சீட்டர் காராக வெளியாகியுள்ளது. 7 சீட்டர் காரில் இரண்டாம் வரிசையின் மத்தியில் கேப்டன் சீட் உள்ளது. 8 சீட்டரில், மடக்கக் கூடிய பென்ச் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கேபினின் லுக், ப்ரீமியமாக இருக்கிறது. வெள்ளை நிறத்தில் டூயல் டோன் கொண்ட நிறம் கொடுக்கப்படுள்ளது. டெஷ்போர்டு வெள்ளை நிறத்திலும், கிளாஸியான மத்திய பேனலும் இருக்கிறது. ஏசி வென்ட்டுகளுக்கு குரோம் வடிவமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

இது தவிர கேபினில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு யூ.எஸ்.பி போர்ட், ப்ளூடூத், ஆக்ஸ் - இன் போர்ட், டூயல் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ட்ரோல், ரூஃபில் அமைக்கப்பட்டுள்ள ஏசி வென்ட் ஆகியவையும் இருக்கின்றன. இந்த ஏசி, முதல் சரவ்ண்டு கூல் தொழில் நுட்பம் கொண்டது என மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. ஆடியோ மற்றும் மொபைல் கன்ட்ரோல் கொண்ட மூன்று ஸ்போக் ஸ்டீரிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கிளைமேட் கன்ட்ரோலும் உள்ளது. மராசோவை இந்தியாவில் இருந்து தனது சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.