பிரபல மாடல்களுக்கு பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்யும் மஹிந்திரா !!

language dropdown

1000 யூனிட்டுகளுக்கு மேல் விற்கும் கார்கள் பிஎஸ் 6 க்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்திருந்தனர்.

expand View Photos
Mahindra: ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500 மற்றும் மராஸ்ஸோவில் பிஎஸ் 6 பெட்ரோல் இன்ஜின் இருக்கும்

Highlights

  • வெரிட்டோ, வெரிட்டோ வைப், நுவோஸ்போர்ட், சைலோ இந்த பட்டியலில் கிடையாது
  • ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500 மராஸ்ஸோவில் பிஎஸ் 6 பெட்ரோல் இன்ஜின் உள்ளது
  • . டீசல் இன்ஜின் விலைகள் ரூ.10 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் முக்கிய கார் நிறுவனங்களில் ஒன்றாகும். Carandbike.com க்கு அளித்த பேட்டியில், மஹிந்திரா & மஹிந்திராவின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா, 1000 யூனிட்டுகளுக்கு மேல் விற்கும் கார்கள் பிஎஸ் 6 க்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்திருந்தனர். வெரிட்டோ, வெரிட்டோ வைப், நுவோஸ்போர்ட் மற்றும் சைலோ ஆகியவை இந்த பட்டியலில் இருக்காது. டீசல் மற்றும் பெட்ரோல் இடையேயான விற்பனை விகிதத்தில் பெரிய மாற்றத்தை நிறுவனம் காணவில்லை என்றாலும், ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மராஸ்ஸோவில் பிஎஸ் 6 பெட்ரோல் இன்ஜின் வழங்க மஹிந்திரா எதிர்பார்க்கிறது.

8iq0901o

சில கார்களுக்கு தான் பெட்ரோல் இன்ஜின் அறிமுகம் செய்யப்படுகிறது

நிறுவனத்தின்  Q2 முடிவுகளின் போது பேசிய பவன் கோயங்கா, “நாங்கள் கே.யூ.வி 100 இல் டீசலைக் கொண்டு வர மாட்டோம். ஆனால் ஸ்கார்பியோ, மராசோ, எக்ஸ்யூவி 500 போன்ற கார்களைப் பார்க்கும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு இடையே ஒரு பெரிய மாற்றத்தை நான் காணவில்லை. டீசல் வாங்குவதற்கு ஒரு செயற்கைத் தடை இல்லாவிட்டால் வாகனங்கள் சில காலம் டீசலாகவே இருக்கும்" என்றார்.

இருப்பினும், மூன்று கார்களின் பெட்ரோல் மூலம் இயங்கும் பதிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நிறுவனம் தயாராகி வருகிறது. "இந்த கார்கள் (ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500, மராஸ்ஸோ) டீசல் மற்றும் பெட்ரோல் இரண்டிற்கும் மஹிந்திரா தயாராகி வருகிறது" என்று கோயங்கா கூறினார்.

2018 mahindra xuv500 facelift

Mahindra XUV500: முன்னர் பெட்ரோல் இன்ஜின் உடன் வந்தாலும் 2018 யில் டீச்ல இன்ஜின் மட்டுமே அறிமுகமானது

மஹிந்திரா ஏற்கனவே எக்ஸ்யூவி 500 யின் பெட்ரோல் மாடலை 2017 ஆம் ஆண்டில் ₹ 15.49 லட்சத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், நிறுவனம் ஏப்ரல் 2018 யில் காரின் ஃபேஸ்லிஃப்டை வெளியே கொண்டு வந்தபோது பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவில்லை. ஸ்கார்பியோவைப் பொருத்தவரை, இதுவும் என்.சி.ஆர் பிராந்தியத்திற்கான பெட்ரோல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. டீசல் இன்ஜின் விலைகள்  ரூ.10 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன.

மராஸ்ஸோ, அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைத்தது. இப்போது ஒரு பெட்ரோல் மோட்டார் வழங்குவதற்கான வாய்ப்புடன், எரிபொருள் வகையைப் பொருத்தவரை விருப்பங்கள் நிச்சயமாக உயரும். எம்.பி.வி பிரிவில் தற்போது மாருதி சுசுகி எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் ரெனால்ட் லாட்ஜி ஆகியவை கவனத்திற்காக போட்டியிடுகின்றன. அவற்றில் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 மட்டுமே பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கின்றன. மராசோவில் ஒரு பெட்ரோல் மாறுபாட்டைச் சேர்ப்பது வாடிக்கையாளர்களுக்கான விருப்பங்களைச் சேர்க்கும் என்பது தெளிவாகிறது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.