1 லட்சம் முகம் கவசங்கள் மற்றும் முகமூடிகளை தயாரித்தது மஹிந்திரா! 

மஹிந்திரா தனது எட்டு தளங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முக கவசங்கள் மற்றும் முகமூடிகளை தயாரித்துள்ளது.

expand View Photos
நிறுவனம், மார்ச் 30 ஆம் தேதி மருத்துவ ஊழியர்களுக்கான முகக் கவசங்களின் தயாரிப்பைத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் மஹிந்திரா & மஹிந்திராவுக்கும் பெரிய பங்கு உள்ளது. அந்த வகையில், நிறுவனம், முக கவசங்கள், முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பு இயந்திரங்களையும் தயாரிக்கத் தொடங்கியது. தற்போது வாகன உற்பத்தியாளர் உற்பத்தியை முடித்து, 1 லட்சம் முக கவசங்களையும், 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட முகமூடிகளையும் விநியோகித்துள்ளது.

Also Read: Mahindra Supplies 80,000 Face Shields To Medical Staff All Over India

மஹிந்திரா, இந்த பணியை வெறும் 1075 man-days-ல் முடித்து சாதனை படைத்துள்ளது. நிறுவனம் மார்ச் 30, ஆம் தேதி மருத்துவ ஊழியர்களுக்கான முகக் கவசங்களை தயாரிக்கத் தொடங்கியது. பின்னர், நிறுவனம் தனது பிதாம்பூர் ஆலையில் மருத்துவ ஊழியர்களுக்காக முக கவசங்களை தயாரிப்பதில் ஈடுபட்டது.

rrnkk2c
மஹிந்திரா ஏரோசல் பெட்டியை வட அமெரிக்காவில் உள்ள மஹிந்திராவின் உள் குழு வடிவமைத்துள்ளது
0 Comments

வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலிகார்பனேட் விண்ட்ஷீல்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஏரோசல் பெட்டிகளின் தயரிப்பையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது நோயாளிகளின் இருமல் நீர்த்துளிகளிலிருந்து மருத்துவ ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெட்ராய்டில் உள்ள மஹிந்திராவின் உள்ளக குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஏரோசல் பெட்டிகளை, நிறுவனம் அதன் நாசிக் ஆலையில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.