மஹிந்திரா XUV300 காரின் பரபர விவரங்கள்..!

பிப்ரவரி 14 அறிமுகமாக இருக்கும் இந்த கார் மஹிந்திராவின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும்.

View Photos
மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 பிப்ரவரி 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கிறது

Highlights

  • மஹிந்திரா XUV300 பிப்ரவரி 14 விற்பனைக்கு வருகிறது
  • W4, W6, W8 என மூன்று வகைகளில் இந்த கார் வருகிறது.
  • 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இதில் இருக்கிறது

மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த கார் XUV300 வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த காரின் விவரங்கள் இரகசியமாக வைத்திருந்தது மஹிந்திரா.

இதன் விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. W4, W6, W8 என மூன்று வகைகளில் இந்த கார் வருகிறது.

vqu7nr2c

W4, W6, W8 என மூன்று வகைகளில் இந்த கார் வருகிறது.

W4 வகை XUV300 காரானது, இரண்டு ஏர் பேக், EBD உடன் ABS, எலக்ட்ரிக் ORVM மற்றும் கியர்ஷிப்ட் இண்டிகேட்டர் உடன் வருகிறது. மேலும் 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள், 4 இன்ச் ஸ்பிக்கர்கள், 3,5 இன்ச் ஆடியோ சிஸ்டம் என பல அம்சங்களுடன் வருகிறது.

lhha1j5c

16 இன்ச் ஸ்டீல் சக்கரம் பெற்றுள்ளது இந்த கார்

W4 வகை XUV300 காரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் W6 வகை XUV300 காரில் இருக்கிறது. கூடுதலாக இந்த காரில் கிரீலில் சில்வர் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்டிரிங் மவுண்ட் கண்ட்ரோல்(Steering mount control), டோர் கிலாடிங்(Door cladding), கீ இல்லாத எண்ட்ரி(Keyless entry) அம்சங்கள் இந்த W6 வகை காரின் சிறப்புகள். மேலும் இந்த காரில் கருப்பு நிற ரூப் உள்ளது.

od4n8tlc

இதன் உள்ளமைப்பு சிறப்பாக காட்சியளிக்கிறது

W6 வகை XUV300 காரின் அம்சங்கள் W8 வகை XUV300 காரில் உள்ளது. ஆட்டோமெடிக் ப்ரோஜக்டர் ஹெட்லாம்ப், 17 இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த W8 வகை XUV300 காரில் உள்ளது. வானிலைக்கு ஏற்றது போல் மாறும் கண்ட்ரோல் இந்த காரில் உள்ளது.

0 Comments

இதன் விலை இதுவரை தெரியவில்லை. பிப்ரவரி 14 அறிமுகமாக இருக்கும் இந்த கார் மஹிந்திராவின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.