தயாரிப்பை கணிசமாக குறைத்த மாருதி சூசுகி நிறுவனம்!

குர்கான், மனேசர் உற்பத்தி ஆலையில் கூட்டாக 15.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன

View Photos
கணிசமாக தயாரிப்பைக் குறைத்தது மாருதி சூசுகி

இந்தியாவில் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சூசுகி, இந்த மாதம் தன் வாகன தயாரிப்பை கணிசமான அளவிற்கு குறைத்துக் கொண்டது. இந்த ஆண்டு, வாகனங்களுக்கான வரவேற்பு குறைந்து இருப்பதாலே, மாருதி சூசுகி நிறுவனம் தனது தயாரிப்பை குறைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2018 –யில் 1,62,524 கார்களை தயாரித்த மாருதி சூசுகி நிறுவனம், பிப்ரவரி 2019 –யில் 1,48,959 கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. இது 8.3 சதவிகிதம் குறைவாகும். மாருதி சூசுகி நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களான ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரிஸா ஆகிய கார்களின் தயாரிப்பு எண்ணிக்கை பிப்ரவரி 2018 –யில் 1,61,116 ஆக இருந்தது. அதுவே பிப்ரவரி 2019 –யில் 8.4 சதவிகிதம் குறைந்து 1,47,550 ஆக இருக்கிறது.

கார்

dzire

பிரபல கார் மாடல்களின் தயாரிப்பும் குறைந்தது

ஜனவரி 2019 –யில் அதிக அளவிலான கார்களை தயாரித்தது மாருதி சூசுகி நிறுவனம். ஜனவரி 2018 –யில் 1,56,168 பாசஞ்சர் வாகனங்களை தயாரித்த மாருதி சூசுகி நிறுவனம், ஜனவரி 2019 –யில் 14.3 சதவிகிதம் உயர்த்தி 1,78,459 பாசஞ்சர் வாகனங்களை தயாரித்தது. ஆனால் பிப்ரவரி 2019 –யில் வாகங்களின் விற்பனை, பிப்ரவரி 2018-ஐ ஒப்பிடுகையில் 8.25 சதவிகிதம் குறைந்துள்ளது என FADA தெரிவித்துள்ளது.

0 Comments

குர்கான், மனேசர் என இரு இடங்களில் சூசுகி நிறுவனத்தின் உற்பத்தி ஆலை உள்ளன. மேலும் குஜராத்தில் சூசுகிக்கு சொந்தமான ஆலை உள்ளது. குஜராத்தில் முதல் லைனில், ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது லைனிலும் 2.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் உள்ளது. குர்கான், மனேசர் உற்பத்தி ஆலையில் கூட்டாக 15.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maruti Suzuki Vitara Brezza with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.