Maruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம்! - விலை மற்றும் பிற விவரம்

language dropdown

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேப்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன

expand View Photos
ஆரம்ப விலையாக சிக்மா வேரியண்ட் 8.39 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Highlights

  • The Maruti Suzuki S-Cross now uses a 1.5-litre K-Series petrol engine
  • The S-Cross petrol is offered in 7 trims with manual & automatic options
  • The diesel engine has been discontinued on the Maruti S-Cross in India

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களைக் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி சுசுகியின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் அனைவரையும் கவர்ந்தது. இது ஏப்ரல் மாதம் அறிமுகமாவதாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், இந்தியாவில் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் எஸ்யூவி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப விலையாக சிக்மா வேரியன்ட் 8.39 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஆல்ஃபா ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 12.39 லட்சம் ரூபாய் ஆகும்.

மொத்தம் நான்கு வேரியன்டுகளில் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நெக்ஸாவின் டீலர் ஷோரூம்களிலும், ஆன்லைனிலும் இந்தக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்னும் சில நாட்களில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் மாடலின் விலை:

Maruti Suzuki S-Cross Petrol SHVS Petrol Manual Petrol Automatic
சிக்மா ரூ. 8.39 லட்சம் NA
டெல்டா ரூ. 9.60 லட்சம் ரூ. 10.84 லட்சம்
ஷீட்டா ரூ. 9.95 லட்சம் ரூ. 11.19 லட்சம்
ஆல்பா ரூ. 11.16 லட்சம் ரூ. 12.39 லட்சம்

Also Read: Bookings Open For The Maruti Suzuki S-Cross Petrol

b1pnusio

மாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் மாடல் முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது

மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் மாடல் பவர்டிரேனில் வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 138 Nm டார்க் திறன் வரையிலான சக்தியை வெளிப்படுத்தும். இதன் மோட்டார் SHVS மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறைந்த எரிபொருளில் அதிகப்படியான எரிசக்தி வழங்கும். 18.55 kmpl வரையில் பெட்ரோலை மிச்சப்படுத்தும். ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் நான்கு ஸ்பீடு ஆட்டோமெட்டிக் யூனிட் ஆப்ஷன்கள் உள்ளன. 

maruti suzuki s cross facelift

அப்டேட் செய்யப்பட்ட டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 

இந்த காரில் எல்இடி டெயில்லைட்கள், டூயல் டோன் அலாய் சக்கரங்கள், முன்பக்கத்தில் புரொஜெக்டர் லென்ஸ் ஹெட்லைட்டுகள் உள்ளன. ஆப்பிள் கார் பிளேவுடன் கூடிய ஸ்மார்ட்பிளே சிஸ்டம் உள்ளது. லெதர் ஸ்டீரிங் வீல், ஆட்டோ டிம்மிங் கண்ணாடி, உயரத்தை கூட்டிக் குறைக்கும் டிரைவர் சீட், ஆட்டோமெட்டிக் கிளைமட் கன்ட்ரோல் என பல அம்சங்கள் உள்ளன. 

maruti suzuki s cross facelift

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேஃப்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கியர் இண்டிகேட்டர், முகப்பு பக்கத்தில் டூயல் ஏர் பேக்குகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், அதிவேக எச்சரிக்கை, சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. 

0 Comments

கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்யூவி ரகத்தில் எஸ் கிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இது ப்ரீமியம் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விறக்கப்பட்ட முதல் மாடல் கார் ஆகும். இதுவரையில் கிட்டத்தட்ட 1.25 லட்சம் கார்களை இந்நிறுவனம் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News