மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகியுள்ள தனது மினி ட்ரக் வாகனங்களை திரும்பப் பெறவுள்ளது. இதன் எரிபொருள் பம்பில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கையை மாருதி சுசுகி தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 640 ட்ரக்குகள் திரும்பப் பெறப்படவுள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் கடந்த ஜனவரி 2018 முதல் ஜூலை 2014 வரையிலான கால கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை.
திரும்பப் பெறப்படும் கார்களில் இலவசமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு கோளாறுகள் சரி செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விவரங்களை மாருதி சுசுகியின் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.
