டெஸ்லா பாதி…போர்ஷ் மீதி… விரைவில் அறிமுகமாகவிருக்கும் அல்ஃபெய்ரி ஸ்போர்ட்ஸ் கார்!

அல்ஃப்ய்ரி மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் இரண்டு நொடிகளில் கடந்து விடும் ஆற்றலுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது

View Photos

Highlights

  • விரைவில் அல்ஃபெய்ரி ஸ்போர்ட்ஸ் கார் வெளிவரவிருக்கிறது
  • கூப்பே, காப்ரியோலட், மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வகை
  • 2022-ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஃபியட் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின், துணை நிறுவனமான சொகுசு வகை பிராண்ட் ஆன மஸாராட்டியின் தலைவர் டிம் குன்ஸ்கிஸ் ஒரு புதிய அறிவிப்பை சமீபத்திய ஒரு நிறுவன விழாவில் அறிவித்தார். அவர் கூறுகையில், “விரைவில் அல்ஃபெய்ரி ஸ்போர்ட்ஸ் ரக கார் போர்ஷ் மற்றும் டெஸ்லாவின் கலவையில் வெளிவரவிருக்கிறது. இந்தப் புதிய ரக கார் கூப்பே, காப்ரியோலட், மற்றும் எலெக்ட்ரிக் வகை என மூன்று வெவ்வேறு வகைகளில் வெளியாக உள்ளன” எனக் குறிப்பிட்டார். டிம், இந்தப் புதிய வகை காரின் வெளியீடு தேதியை இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வருகிர 2022-ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022-க்குள் தனக்கான ஸ்டைலை மறுபரிசீலனை செய்து புதுப்பித்துக்கொள்ளும் முயற்சியில் 8 புதிய ரக ஒட்டு வகை கார்கள் மற்றும் 4 எலெக்ட்ரிக் வகை கார்கள் என அதிரடியாக புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் தனது சில புதிய திட்டங்கள் மூலம் லெவானேட் எஸ்யூவி, கிப்லி மற்றும் குவாட்ரோபோட் ஆகிய வண்டிகளுக்கான மாற்று திட்டத்தையும் அறிவிக்க உள்ளது. ஃபெராரியின் பவர் ட்ரெய்ன் முறையை புதிதாக அறிமுகப்படுத்த உள்ள அல்ஃப்ய்ரி ஸ்போர்ட்ஸ் காரில் இருந்து இனி அடுத்து அறிமுகமாகும் அனைத்துக் கார் ரகங்களிலும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது மஸாரட்டி.

0 Comments

மஸாராட்டி இதற்கு முன்னர் தனது அல்ஃப்ய்ரி மாடல் திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால், சில வாகன விதிமுறை கட்டுப்பாடுகளால் 3 லிட்டர் பில்ட் ஃபெராரி மாடல் பயன்பாட்டைக் கொண்டு வரும் வேளையில் களம் இறங்கியது. புதிதாக டெஸ்லாவின் ஒரு பாதியை தன்னுள் எடுத்து அறிமுகம் ஆக இருக்கும் அல்ஃப்ய்ரி, மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் இரண்டு நொடிகளில் கடந்து விடும் ஆற்றலுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கார்

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maserati Quattroporte with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.