'கெத்தா... ஸ்டைலா...' - Royal Enfield பைக்குகளில் ரோந்து பணியில் ஈடுபடும் கேரள பெண் போலீஸ்!

language dropdown

திருச்சூர் காவல்துறையினரால் சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த பெண்கள் ரோந்து குழுக்கள் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதோடு ஊரடங்கை செயல்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன.

ஊரடங்கை செயல்படுத்த, ராயல் என்ஃபீல்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோந்து மோட்டார் சைக்கிள் ஆகும். expand View Photos
ஊரடங்கை செயல்படுத்த, ராயல் என்ஃபீல்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோந்து மோட்டார் சைக்கிள் ஆகும்.

Highlights

  • திருச்சூர் காவல்துறையின் சிறப்பு ரோந்து குழுவை 12 பெண் போலீஸ் உருவாக்கினர
  • மூத்த குடிமக்கள், பெண்கள் & குழந்தைகளுக்கு அவர்கள் உதவுவார்கள்
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் ராயல் என்ஃபீல்ட்ஸ் சவாரி செய்ய பயிற்சி பெற்றனர்

நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வரும் கொரோன வைரஸ் தொற்றால், இந்தியாவில் 13,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 437 பேர் இறந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, மத்திய அரசு நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிம் உள்ள கேரள மாநிலத்தில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வைரஸ் தொற்று பரவலை படிப்படியாக குறைத்து வருகின்றனர். அதே சமயம் போலீசாரும் ஊரடங்கை கடுமையாக்கியுள்ளனர். 

அந்த வகையில், திருச்சூர் காவல்துறையினர், ஊரடங்கு மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுத்த, சிறப்பு ரோந்து குழுவை 12 பெண் போலீஸார் உருவாக்கினர். இந்த போலீஸார் இந்த ஆண்டு தொடக்கத்தில் ராயல் என்ஃபீல்ட்ஸ் சவாரி செய்ய பயிற்சி பெற்றனர்.

royal enfield bullet 350 uce
ராயல் என்ஃபீல்ட் நாட்டில் பல போலிஸ் படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரோந்து மோட்டார் சைக்கிள் ஆகும்.

பெண்கள் ரோந்து குழுக்களின் சிறப்பம்சங்கள்:

அவர்கள் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் மூலம் ஊரடங்கை செயல்படுத்தி நகரத்தை சுற்றி வருகிறார்கள். 

எளிதில் அடையாளம் காண ஒரே மாதிரியான வண்ண தலைக்கவசங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவார்கள். 

இதன் மூலம், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கலாம்.

0 Comments

இது கேரள காவல்துறையின் ஜனமைத்ரி சுரக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.