MG Motor EZS: இந்தியாவில் அறிமுகமாகும் எம்ஜி எலக்ட்ரிக் மாடல் !!

language dropdown

இந்த எலக்ட்ரிக் வாகனத்தை தொடர்ந்து ஏழு இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் சந்தைக்கு வரும்

expand View Photos
MG eZS: இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இரண்டாவது எம்ஜி கார் இதுவாகும்

Highlights

  • பேட்டரி 141 bhp மற்றும் 353 Nm உட்ச டார்க் தருகிறது.
  • 7 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம்
  • குஜராத்தில் உள்ள அதன் ஹாலோல் ஆலையில் அசம்பிள் செய்யப்படும்

எம்.ஜி. மோட்டரின் இந்தியாவில் இரண்டாவது அறிமுகம் செய்ய இருக்கும் கார் எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும். இது குஜராத்தில் உள்ள அதன் ஹாலோல் ஆலையில் அசம்பிள் செய்யப்படும். சீன கார் தயாரிப்பாளர் எம்ஜி நிறுவனம் அடுத்த பதினெட்டு மாதங்களில் இந்தியாவில் நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவற்றில் MG eZS EV ஒன்றாகும். இந்த மாடல் டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

qqh6c1b

MG eZS இந்தியாவில் அசம்பிளி செய்யப்படும் 

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் eZS ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரானது தனது இறுதி சுற்று சோதனையில் இருக்கக்கூடும் என்பதை தெரிகிறது. தோற்றத்தைப் பொறுத்தவரை, இந்த மாடல் உலகளாவிய மாடலுடன் மிகவும் ஒத்ததாக இருக்கிறது. இது ZS மென்மையான ரோடரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது. இறுக்கமான ஓவர்ஹாங்க்கள், பரந்த முகம் மற்றும் நுட்பமாக சாய்ந்த கூரை போன்ற வடிவமைப்புகள் இந்தியாவில் வாங்குபவர்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளன. மாதிரியின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் மாடலை போன்றே இது இருக்கும் என எண்ணப்படுகிறது. இதில் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. இது WLTP சுழற்சியின் படி 262 கி.மீ. ட்ஜ்ஹரும். 7 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி 7 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம். 50 கிலோவாட் டிசி சார்ஜரைப் பயன்படுத்தி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். பேட்டரி 141 bhp மற்றும் 353 Nm உட்ச டார்க் தருகிறது.

n20f3br

MG eZS: அடுத்த ஆண்டு இந்தியாவில் இது அறிமுகம் செய்யப்படும்.

எம்ஜி மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் கவுரவ் குப்தா முன்பு carandbike க்கு Q3 மற்றும் FY2020 இன் Q4 இன் தொடக்கத்தில், எம்ஜி மின்சார வாகனத்தை கொண்டு வரப்படும் என கூறியிருந்தார். இந்த எலக்ட்ரிக் வாகனத்தை தொடர்ந்து ஏழு இருக்கைகள் கொண்ட எம்ஜி ஹெக்டர் சந்தைக்கு வரும். 12 மாதங்களுக்குள் இந்தியாவில் இரண்டு புதிய பிளாட்பார்மை தொடங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News