இந்தியாவில் MG ZS EV எப்போது அறிமுகம் தெரியுமா?

பேட்டரி 141 bhp மற்றும் 353 Nm உட்ச டார்க் தருகிறது.

இந்தியாவில் MG ZS EV எப்போது அறிமுகம் தெரியுமா? expand View Photos

இந்த வார தொடக்கத்தில் ZS EV யை தனது இந்திய இணையதளத்தில் பட்டியலிட்டுள்ள எம்.ஜி மோட்டார் இந்தியா, அதன் புதிய மின்சார எஸ்யூவி மற்றும் இந்தியாவில் அதன் இரண்டாவது காரை அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது. எம்ஜி இசட் ZS EV 2019 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் இந்த கார் 2020 முதல் காலாண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா ஈ.வி க்கு போட்டியாக இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் மாடலை போன்றே இது இருக்கும் என எண்ணப்படுகிறது. இதில் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. இது WLTP சுழற்சியின் படி 262 கி.மீ. தரும். 7 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி 7 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம். 50 கிலோவாட் டிசி சார்ஜரைப் பயன்படுத்தி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். பேட்டரி 141 bhp மற்றும் 353 Nm உட்ச டார்க் தருகிறது.

இது ZS மென்மையான ரோடரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது. இறுக்கமான ஓவர்ஹாங்க்கள், பரந்த முகம் மற்றும் நுட்பமாக சாய்ந்த கூரை போன்ற வடிவமைப்புகள் இந்தியாவில் வாங்குபவர்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளன

கூடுதலாக, எம்.வி. மோட்டார் இந்தியா, ஈ.வி விற்பனையை ஆதரிப்பதற்காக சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் நாட்டின் முதல் 50 கிலோவாட் டி.சி சார்ஜிங் நிலையங்களை வெவ்வேறு நகரங்களில் அமைக்கும். சார்ஜிங் நெட்வொர்க்கை நிறுவ ஃபோர்டம் இந்தியாவுடன் இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் டெல்லி-என்.சி.ஆர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ள அதன் ஷோரூம்களில் சார்ஜ் பாய்ண்டை எம்ஜி அமைக்கும்.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.