MotoGP: 2020 MotoGP சீசனில் மார்க் மார்க்வெஸ் உடன் இணையும் அவரது சகோதரர் அலக்ஸ் மார்க்வெஸ்

Moto3, Moto2 உலக சாம்பியன்ஷிப்களில் 12 பந்தயங்களை வென்றுள்ளார் அலக்ஸ்

expand View Photos
மார்க்வெஸ் சகோதரர்கள் அடுத்த சீசனில் ரெப்சல் ஹோண்டா அணிக்காக களமிறங்குவார்கள்

MotoGP தொடரின் முக்கிய அணியான ரெப்சால் ஹோண்டா 2020 ஆம் ஆண்டிற்கான வீரர்களை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ரெப்சால் ஹோண்டா அணிக்காக 8 முறை உலக சாம்பியனான மார்க் மார்கெஸ் மற்றும் லொரென்சோ ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்பிரிக்ஸ் முன்பு தனது ஓய்வை அறிவித்தார் லொரென்சோ. இதனால் அடுத்த ஆண்டு மார்க் மார்க்வெஸ் உடன் யார் இணைவார் என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்க் மார்க்வெஸ் உடன் அவரது தம்பி அலக்ஸ் மார்க்வெஸ் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சகோதரர்களான மார்க் மற்றும் அலக்ஸ் ஒரே அணிக்காக பங்கேற்க உள்ளது MotoGP ரசிகர்கள் இடையே இன்ப அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஹோண்டா RC213V பைக்கை ஓட்ட உள்ள இந்த மார்க்வெஸ் சகோதரர்களில் அலக்ஸ் மார்க்வெஸ் Moto2 யில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் தான் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Moto3, Moto2 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அலக்ஸ் மார்க்வெஸ் இந்த சீசனில் 10 முறை டாப் 3 யில் வந்துள்ளார்.

0 Comments

Moto3, Moto2 உலக சாம்பியன்ஷிப்களில் 12 பந்தயங்களை வென்றுள்ளார் அலக்ஸ். இதுவரை 8 உலக சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றுள்ளார் அவர். Moto 3 யில் மூன்று சாம்பியன்ஷிப்களிலும் Moto 2 யில் ஐந்து சாம்பியன்ஷிப்களிலும் பங்கேற்றுள்ளார் அலக்ஸ்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.