விரைவில் ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்..!!!

புது ஓட்டுநர் உரிமத்தில் வாகனங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தான தகவல்களும் இருக்கும்

View Photos
அக்டோபர் மாதம் முதல் இந்த மாற்றங்கள் வரும்

Highlights

  • இந்த ஆண்டுக்குள் இந்த மாற்றங்கள் வரும்
  • ஒட்டுநர் உரிமம் ஒரே வடிவத்திலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் பெறுகிறது
  • அனைத்து ஓட்டுநர்களையும் ஒரே டேட்டா பேஸ் கீழ் கொண்டு வரவுள்ளன

வரும் அக்டோபர் 1 முதல் ஒட்டுநர் உரிமத்தில் சில மாற்றங்கள் வரவுள்ளன. இந்தியா முழுவதும் அனைத்து ஒட்டுநர் உரிமம் ஒரே வடிவத்திலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் பெறுகின்றன. மேலும் பத்து ஆண்டுகள் ஒரு ஓட்டுநர் செலுத்திய பெனால்ட்டிகள் குறித்து அறிய, QR Code உள்ளது.

uglfuaqoஅவசர உதவி எண் இதில் இருக்கும்

இதன் மூலம், அனைத்து வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களின் விவரங்கள் ஒரே டேட்டா பேஸ் கீழ் கொண்டு வரவுள்ளன. QR Code இருப்பது மூலம் பழைய பெனால்ட்டிகளை காவல்துறையினரால் எளிதாக கண்டறிய முடியும்.

dmutg508வாகன உரிமையாளர் குறித்தான தகவல்களும் இதில் இருக்கும்

மேலும் இந்த புது ஓட்டுநர் உரிமத்தில் வாகனங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தான தகவல்களும் இருக்கும். தற்போதைய ஓட்டுநர் உரிமத்தில் அச்சிடும் எழுத்துகள் நாளடைவில் அழிந்து போவதால், புது ஓட்டுநர் உரிமத்தில் அச்சிடுவதிலும் மாற்றம் கொண்டுவர உள்ளது.

kb1c612oபின் பக்கத்தில் வாகனங்கள் குறித்தான தகவல்கள் இருக்கும்

0 Comments

புது ஓட்டுநர் உரிமத்தில் அவசர உதவி எண்ணும் பதிவு செய்யப்படுகிறது. விபத்து நிகழும் போது இது உதவியாக இருக்கக்கூடும். வாகன ரெஜிஸ்ட்டர் கார்டுகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் முன் பகுதியில் Chip மற்றும் பின் பக்கத்தில் QR Code இடம் பெறும். முன் பகுதியில் வாகன உரிமையாளர் மற்றும் மாசு குறித்தான தகவல்கள் இடம் பெறும். பின் பக்கத்தில் வாகனத்தை குறித்தான தகவல்கள் இருக்கும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.