குவார்டிசைக்கிள்ஸ்: புதிய மாடல் காருக்கு இந்திய அரசாங்கம் அனுமதி!

இதன் பின்னர் இந்திய சூழலுக்கு ஏற்ற புகை வெளிபாடு திறன், பெட்ரோல் டீசல், அல்லது வேறு வகையில் வாகனம் செயல்படுமா என்பது குறித்தெல்லாம் இனிதான் பரிசோதனை முயற்சிகள் நடைபெற உள்ளது

View Photos
Bajaj Qute will now be launched in India under new Quadricycle vehicle classification

Highlights

  • புதிய வகை சிறிய மாடல் கார்களுக்கள்
  • இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது
  • புகை வெளியீடு மற்றும் இதர சான்றிதழுக்காக காத்திருப்பு

புது வகை சிறிய மாடல் கார்களுக்கான அனுமதியை இந்திய அரசாங்கம் அளித்துள்ளது. இந்தப் புதிய நான்கு சக்கர கார் வகை மாடல் சொந்த வாகனமாகவும், வணிக ரீதியிலான வாகனமாகவும் பயன்படுத்துவதற்கான புகை வெளியீடு சான்றிதழ் மற்றும் இதர அனுமதி சான்றிதழ்களை இந்திய அரசு மற்றும் தேசிய வாகன ஆய்வு சங்கம் சார்பில் அனுமதி வாங்கவும் காத்திருக்கிறது.

bajaj qute quadricycle

பஜாஜ் பேனரின் கீழ் முதன்முதலாக இந்த மாடல் கார் அறிமுகம் ஆக உள்ளது. இதுபோன்றதொரு சிறப்பு அம்ச வாகனம் ஐரோப்பா மற்றும் சில வெளிநாடுகளுக்குப் பின்னர் இந்தியாவில்தான் முதன்முதலாக அறிமுகமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகன வகைகளில் சேரும் இந்தப் புதிய வாகனத்துக்கு இந்த அடிப்படையிலேயே பச்சை நிற நம்பர் போர்டு தரப்படுமா அல்லது மற்ற வாகனங்கள் வகைகளின் கீழ் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரையில் வெளிவரவில்லை.

0 Comments

bajaj qute quadricycle

இந்தப் புது வகை கார் மாடலின் எடை 475 கிலோவுக்கு கீழானதாக மட்டுமே இருக்கும். நீளம் மற்றும் அகல அளவுகள் குறித்த அளவீடுகள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை. இது தொடர்பான விவரங்களை விரைவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த வாகனம் செயல்படுமா என்பது குறித்த ஆய்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் இந்திய சூழலுக்கு ஏற்ற புகை வெளிபாடு திறன், பெட்ரோல் டீசல், அல்லது வேறு வகையில் வாகனம் செயல்படுமா என்பது குறித்தெல்லாம் இனிதான் பரிசோதனை முயற்சிகள் நடைபெற உள்ளது. இந்த வாகனத்தின் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Bajaj Qute with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.