சூசுகி நிறுவனத்தின் புது ஜிக்சர் பைக் அறிமுகம் - முழு விவரங்கள் உள்ளே...!

ஐந்து ஸ்பிட் கியர் பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக் மூன்று வண்ணங்களில் வருகிறது

View Photos
பழைய ஜிக்சர் பைக்கை விட புது ஜிக்சர் பைக்கானது 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்

Highlights

  • 1,00,212 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது இந்த பைக்
  • இந்த பைக்கானது டிசைன் மாற்றம் பெற்றுள்ளது.
  • 155 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் இன்ஜின் பெற்றுள்ளது இந்த பைக்

சூசுகி நிறுவனமானது 2019 சூசுகி ஜிக்சர் 155 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1,00,212 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ள இந்த பைக்கானது டிசைன் மாற்றம் பெற்றுள்ளது.

புது LED ஹெட்லாம்ப், புது டெயில் பாகம், டெங்க் டிசைன் மாற்றம் ஆகியவை இந்த புது ஜிக்சரில் உள்ளது. பழைய ஜிக்சர் பைக்கை விட புது ஜிக்சர் பைக்கானது 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்.

8c37gj7sஜிக்சர் பைக்கின் விலை 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாக நிர்ணைக்கப்பட்டுள்ளது

சூசுகி மோட்டர்சைக்கிள் இந்தியாவின் துணை தலைவரான தேவசிஸ் ஹாடா கூறுகையில், ‘பிரிமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்புள்ளது. அதனை மனதில் வைத்தே சூசுகி ஜிக்சர் 155 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். புது டிசைன், அட்வான்ஸ் தொழிற்நுட்பம், பவர்புல் செயல்பாடுடன் இந்த பைக் வருகிறது' என்றார்.

f50m38ac

டெக்னிக்கல் மாற்றங்கள் இந்த பைக்கில் உள்ளன

மெக்கானிக்கலாக இந்த புது ஜிக்சர் பைக்கில் பெரிய மாற்றங்கள் இல்லை. 155 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட், எரிபொருள் இங்ஜெக்டர் இன்ஜின் உடன் இது வருகிறது. இது 8000 rpm யில் 13.9 bhp  மற்றும் 6000 rpm யில் 14 Nm டார்க்கையும் தருகிறது. ஐந்து ஸ்பிட் கியர் பாக்ஸ் பெற்றுள்ள இந்த பைக் மூன்று வண்ணங்களில் வருகிறது.

0 Comments

டிவிஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹோண்டா சிபி ஆர்னட் 160 ஆர், யமஹா FZ-S V 3.0 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது2019 சூசுகி ஜிக்சர் 155

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.