ஜேம்ஸ் பாண்டு படத்தில் ‘நடிக்கப்போகும்’ சொகுசு கார்!

அடுத்த மாதம் இங்கிலாந்தில், பாண்டு 25 படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

View Photos
இதில் ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர், ரமி மாலிக் பாண்டுக்கு வில்லனாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

உலக புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு படங்கள், அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமல்ல, படத்தில் பயன்படுத்தப்படும் கார்களுக்கும் மிகவும் ஃபேமஸ். ஒவ்வொரு படத்திலும் மிகவும் புதிய வித சொகுசு கார்களை, ஜேம்ஸ் பாண்டு ஓட்டுவார். அப்படி இந்த முறை, ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் மின்சார கார், ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்தால் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

‘தி சன்' செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அடுத்து வெளியாக உள்ள ஜேம்ஸ் பாண்டு படத்தில், ஆஸ்டர் மார்ட்டின் நிறுவனத்தின் ‘ரேப்பிட் இ' கார் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு ‘பாண்டு 25' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படம், 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், மின்சார வாகன வகையைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

ijcuj60s

 

இப்படி மின்சார காரை, பாண்டு படத்தில் பயன்படுத்துவதற்குக் காரணம், அந்தப் படத்தின் இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுனாகா, சுற்றுச்சூழல் மீது அதிக பற்றுடையவர் என்பதால்தான் எனப்படுகிறது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களும் தலையசைக்கவே, ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் ஃபுகுனாகா. இந்தத் திட்டம் சாத்தியப்பட்டால், பாண்டு படத்தில் மின்சார கார் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும். 

ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வகை கார் ரேப்பிட் இ ஆகும். இந்த வகையில் முதற்கட்டமாக 155 கார்களை தயாரிக்க உள்ளது ஆஸ்டன் மார்ட்டின். இந்த வாகனம் 64 kWh பேட்டிரி மூலம் பவரூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 603 பி.எச்.பி அவுட்புட் எடுக்க முடியும். ரேப்பிட் இ, 100 கிலோ மீட்டர் வேகத்தை 4 நொடிகளுக்குள் அடையும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வரை வேகம் போகும். ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால், 320 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 Comments

அடுத்த மாதம் இங்கிலாந்தில், பாண்டு 25 படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதில் ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர், ரமி மாலிக் பாண்டுக்கு வில்லனாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.