கொரோனா வைரஸ்: ராபிடோ சேவைகள் நிறுத்தம்!

language dropdown

பைக் டாக்ஸி சேவை வழங்குநர், ஓட்டுநர்-கூட்டாளர்களில் யாருக்காவது பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் தேவைப்பட்டால், ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கும்.

ராபிடோ ஒரு பைக் டாக்ஸி சேவை ஆபரேட்டர் ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ளது expand View Photos
ராபிடோ ஒரு பைக் டாக்ஸி சேவை ஆபரேட்டர் ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ளது

Highlights

  • ராபிடோ, அதன் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது
  • வரையறுக்கப்பட்ட சேவைகள் கிடைக்கும் - பைக் டாக்ஸி சேவை வழங்குநர்
  • டிரைவர்-கூட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, இந்திய அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்ததால், பைக் பகிர்வு இயக்கம் நிறுவனமான ராபிடோ தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. ராபிடோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் செயல்பாடுகள், அத்தியாவசிய சேவைகளை ஆதரிப்பதற்காக, மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச வாகன நெட்வொர்க்குடன் செயல்படும். மார்ச் 25 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14, 2020 வரை கோவிட்-19 தொற்றை எதிர்கொண்டு 21 நாள் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

Also Read: Ola Waives Off Rental Fee For Leased Cars

நிறுவனம் ஒரு அறிக்கையில், "கோவிட்-19 ஒரு வளர்ந்து வரும் தொற்றுநோய் மற்றும் ராபிடோ அதை எதிர்த்துப் போராடுவதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. கள சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பின்னர், நாங்கள் எங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இருப்பினும், மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை ஆதரிப்பதற்கான குறைந்தபட்ச வாகன நெட்வொர்க்குடன் நாங்கள் செயல்படுவோம்.

"இவை சவாலான காலங்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இந்த கடினமான காலங்களில் எங்கள் கேப்டன்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க எங்கள் நகர அணிகளுடன் நாங்கள் உள்நாட்டில் பணியாற்றி வருகிறோம். இந்த கடினமான காலங்களில் கேப்டன்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை பராமரிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் சில சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்".

rapido
ராபிடோ ஒரு பைக் டாக்ஸி சேவை வழங்குநராகும், நிறுவனம் இப்போது, அதன் டிரைவர்-கூட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் குழு காப்பீடு வழங்குகிறது.

பைக் டாக்ஸி சேவை வழங்குநர், ஓட்டுநர்-கூட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் குழு காப்பீட்டுத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளார், இது 'கேப்டன்கள்' என்று அழைக்கப்படுகிறது, இது ஹாப்சிடலைசேஷன் ஏற்பட்டால் நிதிச் சுமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக.

0 Comments

ராபிடோ 2015-ல் சேவைகளைத் தொடங்கியது. மேலும், இது சுமார் 15 லட்சம் ஓட்டுனர்களைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.