கொரோனா வைரஸ்: டாடா மோட்டார்ஸின் அசத்தல் முயற்சி! 

வாடிக்கையாளர்கள் இப்போது டாடா காரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், வாங்கும் செயல்முறையை டிஜிட்டல் முறையில் முடிக்கலாம், மேலும் வாகனத்தை வீட்டு வாசலில் பெறலாம்.

இப்போது, ​​டாடா டியாகோ, அல்ட்ரோஸ், டைகோர், நெக்ஸன் மற்றும் ஹாரியர் ஆகிய பிஎஸ் 6 மாடல்களை ஆன்லைனில் வாங்கலாம் expand View Photos
இப்போது, ​​டாடா டியாகோ, அல்ட்ரோஸ், டைகோர், நெக்ஸன் மற்றும் ஹாரியர் ஆகிய பிஎஸ் 6 மாடல்களை ஆன்லைனில் வாங்கலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 1250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 32 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபித்துள்ள நிலையில், வணிகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மார்ச் 31-ந் தேதிக்குள் பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்யவேண்டும் என்ற நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 24 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தை சிறந்த வழியில் கையாள, டாடா மோட்டார்ஸ் அசத்தல் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தால், வீட்டிற்கே டோர் டெலிவரி செய்கிறது. 

Also Read: Tata Sons Contributes ₹ 1000 Crore To Fight COVID-19

nrfj5l3g
டாடாவின் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில், டோக்கன் தொக ரூ.5000 செலுத்தி கார்களை முன்பதிவு செய்யலாம். 

Also Read: Tata Trusts Pledges ₹ 500 Crore For The Fight Against Coronavirus

முன்பதிவு விவரங்கள்:

Tata Motors-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, உங்களுக்கு பிடித்த கார், டெலிவரி செய்ய வேண்டிய இடம் மற்றும் விருப்பமான டீலரைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். 


டோக்கன் தொகை:

தியாகோ ஃபேஸ்லிஃப்ட்டின் டோக்கன் தொகை ரூ.5,000 ஆகும்.
2020 டாடா ஹாரியர் பிஎஸ் 6-ன் டோக்கன் தொகை ரூ.30,000 ஆகும். 


முன்பதிவுக்கு பிறகு:

முன்பதிவு செய்தவுடன், வாங்கும் பணியைத் தொடங்க உங்கள் விருப்பமான டீலர் உங்களை அழைப்பார். விற்பனை ஆலோசகர் சிறந்த சலுகைகள், விலை மேற்கோள், நிதி விருப்பம் ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார். இவை அனைத்தும் மின்னஞ்சல்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் ஆன்லைனில் நடக்கும். செயல்முறை முடிந்ததும், உங்கள் கார், உங்கள் வீடு தேடி வரும்.

Also Read: Tata Motors Extends Warranty & Free Service Period Till July 31, 2020 For Customers

5em2c9a8
விற்பனை ஆலோசகர் சிறந்த சலுகைகள், விலை மேற்கோள், நிதி விருப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்

எந்தெந்த கார்களை தேர்வு செய்யலாம்? 

0 Comments

இப்போது, டாடா டியாகோ, ஆல்ட்ரோஸ், டைகோர், நெக்ஸான் மற்றும் ஹாரியர் ஆகிய பிஎஸ் 6 மாடல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, வாங்கலாம். வாகனப்பதிவு மற்றும் டெலிவரி, ஊரடங்கு முடிந்த பிறகு ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.