வாடிக்கையாளர்களுக்கு ஷீல்ட் + திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது எம்.ஜி மோட்டார்!

language dropdown

எம்.ஜி. மோட்டார் இந்தியா 'எம்.ஜி. ஷீல்ட் +' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

expand View Photos

Highlights

  • வாகன நிறுவனங்கள் தங்கள் டீலர்ஷிப் மற்றும் சேவை மையங்களைத் திறக்கின்றன
  • எம்.ஜி. மோட்டார் இந்தியா 'எம்.ஜி. ஷீல்ட் +' திட்டத்தைத் தொடங்கியுள்ளது
  • வாடிக்கையாளர்களுக்கு கார்களைப் பற்றி ஆடியோ செய்தி மூலம் கூறப்படுகிறது

நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வருவதால், வாகன நிறுவனங்கள் தங்கள் டீலர்ஷிப் மற்றும் சேவை மையங்களைத் திறக்கின்றன. வாகனங்களை விற்பனை செய்வதற்கும், சேவை செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான சூழல் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, எம்.ஜி. மோட்டார் இந்தியா 'எம்.ஜி. ஷீல்ட் +' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் தொடர்பு இல்லாத விற்பனை, வீட்டு விநியோக சேவை மற்றும் கார்களின் சிறந்த சானிடேஷன் ஆகியவை அடங்கும்.

நிறுவனம் தனது சேவைகளில் குரல் தொடர்புகளையும் பயன்படுத்துகிறது. ஷீல்ட்+ ஒரு தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதில் வாடிக்கையாளர்களுக்கு கார்களைப் பற்றி ஆடியோ செய்தி மூலம் கூறப்படுகிறது. ஷோரூமுக்கு வந்த பிறகு, வாடிக்கையாளர் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கார் பற்றிய அனைத்து தகவல்களையும் குரல் செய்தி மூலம் பெறலாம்.

7429l43g
கார் தயாரிப்பாளர் மெட்க்ளினின் செராஃபியூஷன் தொழில்நுட்பத்தின் மூலம் கார் சானிடேஷன் மற்றும் முழுமையான கிருமி நீக்கம் செய்வதையும் ஆராய்ந்து வருகிறார்.

ஷீல்ட்+ திட்டத்தின் கீழ், எம்.ஜி மோட்டார் இந்தியாவின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் தெர்மல் ஸ்கேனிங்கை மேற்கொண்டு வருகிறது. பிபிஇ உபகரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஷோரூம்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை தொடர்ந்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 

698rthvg
எம்.ஜி மோட்டார் இந்தியா இந்தியா, தனது அனைத்து கார்களையும் ஷோரூம்களில் வெளியேயும் கிருமி நீக்கம் செய்து வருகிறது.
0 Comments

எம்.ஜி.யின் ஐ-ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சுத்திகரிப்பு குறித்து தொடர்ந்து தெரிவிக்கப்படும். கார் உரிமையாளர்களின் வீட்டிலும் துப்புரவு சேவைகள் வழங்கப்படும். இந்த பிராண்ட் சமீபத்தில் MY MG செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு சேவையின் போது தங்கள் வாகனத்தை கண்காணிக்கவும் டிஜிட்டல் முறையில் கட்டணத்தை செலுத்தவும் அனுமதிக்கிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.