கொரோனா வைரஸ்: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.7 கோடி வழங்கியது ஹூண்டாய்!

language dropdown

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பிரதமர் நிவாரண நிதிக்கு 7 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள், பிபிஇக்கள் மற்றும் முகமூடிகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குவது போன்ற பிற ஆதரவு முயற்சிகளிலும் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது expand View Photos
இறக்குமதி செய்யப்பட்ட சோதனைக் கருவிகள், பிபிஇக்கள் மற்றும் முகமூடிகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குவது போன்ற பிற ஆதரவு முயற்சிகளிலும் ஹூண்டாய் ஈடுபட்டுள்ளது

Highlights

  • தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது ஹூண்டாய்
  • ரூ.4 கோடி மதிப்பிலான கோவிட்-19 கண்டறிதல் சோதனை கருவிகள் இறக்குமதி
  • வென்டிலேட்டர் உற்பத்தியை அதிகரிக்க ஏர் லிக்விட் உடன் கூட்டு சேர்ந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிவாரண முயற்சிகளை மேற்கொள்வதற்காக, இன்று, Hyundai மோட்டார் இந்தியா பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund)-க்கு ரூ.7 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தது. 

தற்போது, வென்டிலேட்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்காக ஏர் லிக்விட் மெடிக்கல் சிஸ்டம்ஸுடன் ஹூண்டாய் கூட்டு சேர்ந்துள்ளது.

Also Read: Coronavirus Pandemic: Hyundai Donates 5 Crore To Tamil Nadu Chief Minister Relief Fund

kiqprju4
ஹூண்டாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் ரூ.5 கோடி நன்கொடை வழங்கியது

Also Read: Coronavirus: Hyundai Logo Re-imagined To Promote Social Distancing

முன்னதாக, ஹூண்டாய், தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள கோவிட்-19 கண்டறியும் சோதனைக் கருவிகளை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை வைரஸை மிகத் துல்லியமாக கண்டறியும் என்றும், 25,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. 

Also Read: Hyundai India Provides Advanced Kits For Coronavirus Testing

0 Comments

ஹூண்டாய் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு PPEs, முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகளையும், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் பாதிப்புக்குள்ளான பிரிவினருக்கு அத்தியாவசிய பொருட்களையும் விநியோகித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

Be the first one to comment
Thanks for the comments.