கொரோனா வைரஸ்: மருத்துவர்களுக்காக 500 ஓலா கேப்ஸ் இயக்கம்! 

language dropdown

500 ஓலா கேப்ஸ் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்கள், போக்குவரத்து மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படும்.

expand View Photos
ஊரடங்கின் போது, ஓலா, வேலையில்லாமல் இருக்கும் தனது ஓட்டுநர்களுக்காக நிதி திரட்டுகிறது.

Highlights

  • ஓலா கேப்ஸ் பெங்களூர், மங்களூர், ஹூப்ளி மற்றும் பிற பகுதிகளில் இயங்கும்
  • ஓலா, டிரைவ் தி டிரைவர் ஃபண்ட் முன்முயற்சியின் கீழ் ரூ.20 லட்சம் உயர்வு
  • ஓலா கேப்ஸ், ஊரடங்கின் கீழ் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து விதமான போக்குவரத்தும் ஏப்ரல் 14 வரை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஓலா கேப்ஸ் தனது 500 வாகனங்களை கர்நாடக அரசுக்கு வழங்கியுள்ளது. இவை, மருத்துவர்களை கொண்டு செல்ல பயன்படும். இதனை, கர்நாடகாவின் துணை முதல்வர் டாக்டர் சி.என்.அஸ்வத்நாராயண் ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். 

Also Read: Ola Introduces Drive The Driver Fund Initiative

ஓலாவின் சேவைகள் தர்போது பெங்களூர், மைசூர், மங்களூர், ஹூப்ளி-தார்வாட் மற்றும் பெலகாவி ஆகிய மாவட்டங்களில் கிடைக்கும். இந்த கேப்ஸ் சுகாதாரப் பணியாளர்கள், போக்குவரத்து மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படும். gg4ocjf8

Also Read: Ola Waives Off Rental Fees For Lease Partners

0 Comments

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஓலா கேப்ஸ் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. நிறுவனம், ஊரடங்கு முடியும் வரை ஓட்டுநர்களுக்கு நிதியைத் வழங்கும். நிறுவனம் அதன் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்ததுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.