கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ரூ.8 கோடி வழங்கியது ஓலா! 

ஓலா, (PM CARES) நிதிக்கு ரூ.5 கோடியும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும் வழங்கியுள்ளது.

expand View Photos
ஓலா சமீபத்தில் தனது டிரைவர் சமூகத்திற்கு நிவாரணம் வழங்க 'டிரைவ் தி டிரைவர் பண்ட்'-ஐ அறிமுகப்படுத்தியது

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ஓலா, ரூ.8 கோடி வழங்கியுள்ளது. நிறுவனம், அதன் ஓட்டுநர் கூட்டாளர்கள் நலனில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இப்போது, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES) நிதிக்கு ரூ.5 கோடியும், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும் வழங்கியுள்ளது.

"அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும்,  உதவுவதற்கும் தொடர்ந்து செயல்படுவோம்" என்று ஓலா குழுமத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) கூறினார். 

Also Read: Ola Offers 500 Cabs To Transport Doctors In Karnataka

ola cabs google
(ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஒரு வருட சம்பளத்தை 'டிரைவர் தி டிரைவர் ஃபண்டுக்கு' வழங்கியுள்ளார்)

ஓலா சமீபத்தில் தனது டிரைவர் சமூகத்திற்கு நிவாரணம் வழங்க 'டிரைவ் தி டிரைவர் பண்ட்'-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கேப், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் காளி-பீலி டாக்ஸி ஓட்டுநர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Also Read: Ola Introduces 'Drive The Driver' Fund Initiative

0 Comments

இதற்காக நிறுவனமும், ஊழியர்களும் ஏற்கனவே ரூ.20 கோடி கொடுத்துள்ளதோடு, ஓலாவின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், தனது 1 ஆண்டு சம்பளத்தை கொடுத்துள்ளார். இந்த நிதி, ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு, மருத்துவத்திற்காகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.