Ola-வில் இனி இந்த வசதி கிடையாது! 

மைக்ரோ, மினி மற்றும் பிரைம் அதே போன்று வாடகை மற்றும் வெளி நிலைய சேவைகள் சவாரிகளை தொடர்ந்து வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

expand View Photos

கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, சவாரி நிறுவனமான ஓலா, நாட்டில் ஷேர் சவாரிகளை நிறுத்தியுள்ளது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். இது உலகளவில், இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட நபர்களின் மரணத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும். நிறுவனம் பி.டி.ஐ-க்கு அளித்த அறிக்கையின்படி, 'ஓலா ஷேர்' அம்சம் அடுத்த அறிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறியது.

நிறுவனத்தின் அறிக்கை, "COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான எங்கள் முயற்சிகளில், அடுத்த அறிவிப்பு வரும் வரை 'ஓலா ஷேர்' வகையை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்,"

Also Read: Ola Kick Starts Services In London

ஓலா ஷேர் ஆப்ஷன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான சவாரிக்கு ஒப்பிடும்போது குறைந்த செலவில் தங்கள் இடங்களுக்கு செல்ல உதவும். இந்த வகையில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது சமூக தூரத்தை (social distancing) ஊக்குவிக்கும், இது கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு படியாகும்.

0 Comments

மைக்ரோ, மினி மற்றும் பிரைம் அதே போன்று வாடகை மற்றும் வெளி நிலைய சேவைகள் சவாரிகளை தொடர்ந்து வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News