தொடர்ந்து 17வது நாளாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை - எவ்வளவு ஹைக் தெரியுமா..?

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் வரி விகிதம் மட்டும் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.

View Photos
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது சுங்க வரியை தலா 3 ரூபாய் உயர்த்தியது.

Highlights

  • இன்று பெட்ரோல் விலை சுமார் 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது
  • டீசல் விலை சுமார் 55 பைசா உயர்த்தப்பட்டுள்ளது
  • தொடர்ந்து 17வது நாளாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து 17வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 20 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 55 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 8.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 9.77 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 83.04 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் 76.77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 86.54 ரூபாய்க்கும், 77.76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 81.45 ரூபாய்க்கும், 76.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

aq0s6sko

லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மற்ற முக்கிய நகரங்களிலும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளன. நொய்டாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82.35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஐதரபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் முறையே 82.79 ரூபாய்க்கும், 81.48 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இந்தியப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பரிந்துரைப்படி, இந்த விலை உயர்வு அமல் செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், அந்த மாநிலத்தின் விற்பனை வரி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை 17 நாட்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் இரண்டு எரிபொருட்களின் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வை பெட்ரோல் மற்றும் டீசல் பெற்றுள்ளன. 

3re358go

மற்ற முக்கிய நகரங்களிலும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் வரி விகிதம் மட்டும் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. பெர்ரோலைப் பொறுத்தவரை சுமார் 64 சதவீதம், அதாவது சுமார் 50 ரூபாய் வரியாக பெறப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரை 63 சதவீதம், அதாவது சுமார் 49 ரூபாய் வரியாக வசூல் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது சுங்க வரியை தலா 3 ரூபாய் உயர்த்தியது. மே மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை தலா 10 ரூபாய் மற்றும் 13 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. இந்த இரண்டு விலை உயர்வினால் மட்டும் மத்திய அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் வந்தது. 

0 Comments

இந்தியாவில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ஆகியவைதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் மாற்றியமைத்து வருகின்றன. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.