ஐந்தாவது நாளாக பெட்ரோல் விலை உயர்வு

டீசல் விலை மாற்றம் இன்றி காணப்பட்டது.0Comments

View Photos
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.72 ஆக உள்ளது

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றம் காரணமாக பெட்ரோல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலை ஏற்றம் கண்டுள்ளது பெட்ரோல் விலை. டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 பைசா உயர்வை பதிவு செய்துள்ளது. அதே நேரம் டீசல் விலை மாற்றம் இன்றி காணப்பட்டது.

0 Comments

இந்தியன் ஆயில் இணையதள தகவலின் படி டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் பெட்ரோலின் விலை முறையே ரூ.74.76, ரூ.77.44, ரூ.80.42 மற்றும் ரூ.77.72 ஆக இருந்தது. டீசலின் விலையில் மாற்றம் இன்றி டெல்லியில் ரூ.65.73 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.68.14 ஆகவும், மும்பையில் ரூ.68.94 ஆகவும், சென்னையில் ரூ.69.47 ஆகவும் உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.