ஆறாவது நாளாக பெட்ரோல் விலை உயர்வு !!

டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 15 பைசா உயர்ந்தது.

ஒரு லிட்டர் டீசலின் விலை 5 பைசா உயர்வை பதிவு செய்தது. expand View Photos
ஒரு லிட்டர் டீசலின் விலை 5 பைசா உயர்வை பதிவு செய்தது.

பெட்ரோலின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 15 பைசா உயர்ந்தது. அதே நேரம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 16 பைசா உயர்ந்தது.

ஆறு நாட்களாக மாற்றமின்றி இருந்த டீசலின் விலை நேற்று உயர்ந்தது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 5 பைசா உயர்வை பதிவு செய்தது.

0 Comments

இந்தியன் ஆயில் விவரத்தின் படி டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பெட்ரோலின் விலை முறையே ரூ.74.20, ரூ.76.89, ரூ.79.86, ரூ.77.13 ஆக இருந்தது. அதே நேரம் டீசலின் விலை முறையே ரூ.65.84, ரூ.68.25, ரூ.69.06, ரூ.69.59 ஆக இருந்தது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.