ராயல் என்ஃபீல்ட் யின் புது பைக் புகைப்படங்கள் வெளியாகின

language dropdown

2020 ஆம் ஆண்டின் முதல் குவாட்டரில் 1.9 லட்சம் ரூபாய் விலையில் Thunderbird X பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

expand View Photos
பைக் சென்னையில் டெஸ்ட் ட்ரைவ் செய்த போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Highlights

  • இந்தியாவில் BS6 விதிமுறைகள் கட்டாயமாகவுள்ளது
  • மெக்கானிக்கலாகவும் இந்த புது Thunderbird X பைக்கில் மாற்றம் உள்ளது.
  • டிசைன் மாற்றம் செய்யப்பட்ட எக்ஸாச்ட் தெரிகிறது

பைக் மார்கெட்டில் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். ஜாவா பைக்குகள் அறிமுகமாகிய பின் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மவுசு குறைந்துள்ளது. அதனால் புது மாடல் பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது ராயல் என்ஃபீல்ட்.

மேலும் இந்தியாவில் BS6 விதிமுறைகள் கட்டாயமாகவுள்ளதால் மெக்கானிக்கல் மாற்றங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திடம் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே புது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் மாடல் பைக்குகளின் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது Thunderbird X பைக்கின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த பைக் சென்னையில் டெஸ்ட் ட்ரைவ் செய்த போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கலாகவும் இந்த புது Thunderbird X பைக்கில் மாற்றம் உள்ளது. புத்தம் புது எரிபொருள் இண்ஜெக்டர் இன்ஜின் பெற்றுள்ளது இது. டெயில் பாகம், எரிபொருள் டாங்க், செசிஸ் முதலியனவற்றில் மாற்றம் உள்ளது.

உயரம் குறைக்கப்பட்ட ஹாண்டில்பார், டிசைன் மாற்றம் செய்யப்பட்ட எக்ஸாச்ட் ஆகியவற்றிலும் மாற்றம் உள்ளது. BS6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட புது Thunderbird X பைக்கை ராயல் என்ஃபீல்ட் எப்போது விற்பனைக்கு கொண்டு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. 2020 ஆம் ஆண்டின் முதல் குவாட்டரில் 1.9 லட்சம் ரூபாய் விலையில் Thunderbird X பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Source: YouTube

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News