சென்னையை சேர்ந்த பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், தன் பைக்குகளின் விலையை ஏற்றியுள்ளது. 350 சிசி – 500 சிசி வரையுள்ள பைக்குகளின் விலையை 1500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட்.
ராயல் என்ஃபீல்ட் இந்த விலை ஏற்றத்தை இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்க வில்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் டீலர்கள் புதிய பைக்குகளுக்கு 1500 ரூபாய் வரை கூடுதலாக வாங்குகிறார்கள்.
ராயல் என்ஃபீல்ட் 350,500, கிளாசிக் 350,500 மற்றும் ஹிமாலயன் பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டர்செப்டர் பைக்கின் விலையில் மாற்றம் இல்லை
இந்த விலை ஏற்றம் பின் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்கின் விலை 1.34 இலட்சமாகவும் கிளாசிக் 350 ABS பைக்கின் விலை 1.53 இலட்சமாகவும் உள்ளது. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பைக்கின் விலை 1.80 இலட்சமாக உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் புல்லட் 350 தவிர ஏனைய பைக்குகள் அனைத்தும் இரண்டு ABS வசதி பெற்றுள்ளது. புல்லட் 350 பைக்கும் ஏப்ரல் 1,2019 முன் ABS வசதி பெற்றுவிடும்.
இந்த விலை ஏற்றத்திற்கான காரணத்தை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. தயாரிப்பு செலவுகள் அதிகம் ஆனதால் தான் விலை ஏற்றம் ஏற்றபட்டுள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு முற்றிலும் புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். ஜாவா பைக்கின் அறிமுகத்தால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை குறைந்துள்ளது.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.