ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அட்டகாசமான புதிய பைக்குகள்

ரெட்ரோ வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் க்ரோம் மற்றும் சில்லர் வண்ணங்கள் உள்ளன

View Photos
ராயல் என்ஃபீல்ட் 350 இன்ஜின் தான் இந்த புது பைக்கிலும் உள்ளது

Highlights

  • இரண்டு புது பைக்குகளை ராயல் என்ஃபீல்ட் அறிமுகம் செய்துள்ளது
  • 350 மற்றும் 500 வகையில் இந்த புது பைக்குகள் கிடைக்கிறது
  • இதன் விலை 1.62 லட்சம் ரூபாய் இருந்து ஆரம்பிக்கிறது

இந்தியாவில் சிறந்த பைக் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், தனது புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. புல்லட் டிரையல்ஸ் வோர்க்ஸ் ரெப்லிக்கா (Bullet Trials Work Replica) என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் 350 சிசி மற்றும் 500 சிசி வகையில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்ட் Bullet Trials 350, 1.62 லட்சம் ரூபாயாகவும் ராயல் என்ஃபீல்ட் Bullet Trials 500 பைக்கின் விலை 2.07 லட்சம் ரூபாயாகவும் நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பைக்

8e0igmuoமெக்கானிக்கலாக இன்ஜின்களில் மாற்றம் பெரியதாக இல்லை

டெக்னிக்கலாக, ப்ரேமில் மாற்றம் இல்லை. ரெட்ரோ வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் க்ரோம் மற்றும் சில்லர் வண்ணங்கள் உள்ளன. சிங்கிள் சிப்ரிங் (Spring) சீட், லக்கேஜ் ராக் இந்த பைக்கில் உள்ளது. இந்த பைக்கில் டியூப் சக்கரம் உள்ளது. கடினமான சாலைகளில் ஓட்டும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கலாக, இரண்டு டிஸ்க் பிரேக் பெற்றுள்ள இந்த புது பைக்கில் முன்பக்கம் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 240 மிமீ அளவில் டிஸ்க் உள்ளது. Bullet Trials 350 பைக்கில் 346 சிசி இன்ஜின் உள்ளது. இது, 19.8 bhp மற்றும் 28 Nm பவரும் பெற்றுள்ளது. மேலும் ஐந்து கியர் வசதி பெற்றுள்ளது இந்த Bullet Trials 350.

0 Comments

Bullet Trials 500 பைக்கில் 499 சிசி இன்ஜின், 26.1 bhp மற்றும் 40.9 Nm பவர் வசதியும் பெற்றுள்ளது. இதிலும் ஐந்து கியர் வசதியுள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான பைக்குகளில் இந்த பைக்குகளும் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Royal Enfield Classic 350 with Immediate Rivals