பல அலுவலகங்களை மூடும் Royal Enfield நிறுவனம்- திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனமான ஐஷர் மோட்டர்ஸ் நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த தகவல்களை ஜூன் 12 ஆம் தேதி வெளியிட்டது.

அரசு வழிகாட்டுதலின்படி ராயல் என்ஃபீல்டு  நிறுவனம், தங்களது உற்பத்தி மற்றும் விற்பனையை மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தது. expand View Photos
அரசு வழிகாட்டுதலின்படி ராயல் என்ஃபீல்டு  நிறுவனம், தங்களது உற்பத்தி மற்றும் விற்பனையை மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தது.

இந்தியாவின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தன்னுடைய 12 பிராந்திய அலுவலகங்களை மூட முடிவெடுத்துள்ளது. குருகிராமில் உள்ள தனது கார்ப்பரேட் அலுவலகத்தையும் முழுவதுமாக மூட முடிவெடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், நிதிக் குறைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்படி மூடப்படும் அலுவலகங்களில் பணி செய்து வந்த ஊழியர்கள், இனி வீட்டிலிருந்தபடியே பணியைத் தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருகிராம், சென்னை, பெங்களூரு, மும்பை, ஜார்கண்ட், ஐதராபாத், புவனேஷ்வரில் இருந்த அலுவலகங்கள் மூடப்படும் பட்டியலில் உள்ளன.

இது குறித்து உறுதி செய்ய கார் அண்டு பைக் குழு, ராயல் என்ஃபீல்டை தொடர்பு கொண்டது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், தற்போதைய நடவடிக்கையை உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்களின் வளர்ச்சி மற்றும் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் இன்னும் தீவிரமாக மாறி வருகிறது கோவிட்-19 தொற்று. பல இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தொடர்கின்றன. இந்திய ஆட்டோமொபைல் துறையும் கொரோனா வைரஸ் லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது. லாக்டவுன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம், ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஒரு வாகனத்தைக் கூட விற்கவில்லை. மே மாதம் 69 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது. 

thdl9tts

Royal Enfieldன், Interceptor 650 மற்றும் Continental GT 650 விற்பனை நல்ல வகையில் உள்ளது

ராயல் என்ஃபீல்டின் தாய் நிறுவனமான ஐஷர் மோட்டர்ஸ் நிறுவனம், கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த தகவல்களை ஜூன் 12 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஜஷர் தெரிவித்துள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி ராயல் என்ஃபீல்டு  நிறுவனம், தங்களது உற்பத்தி மற்றும் விற்பனையை மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தது. மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் மீண்டும் தங்கள் செயல்பாடுகளை ராயல் என்ஃபீல்டு ஆரம்பித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள தங்களது 90 சதவீத ரீட்டெய்ல் விஷயங்களை ஆரம்பித்துள்ளது ராயல் என்ஃபீல்டு. 

pd0gsn2oRoyal Enfield-ன் Classic 350யின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது

வாகன உற்த்தித் துறைக்கு கடந்த சில மாதங்களாக சாதகமான சூழல் நிலவவில்லை என்றாலும், தங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்ததாக அந்நிறுவனத்தின் சிஇஓ வினோத் தாசரி தெரிவித்துள்ளார். அவர், ‘கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் எங்களின் ஏற்றுமதி 96 சதவீதம் வளர்ந்துள்ளது,' என்று கூறியுள்ளார். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தங்களின் இருப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ராயல் என்ஃபீல்டு.  

fld1tq

அடுத்த 3-4 வருடங்களில் பல பைக் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது ராயல் என்ஃபீல்டு

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.