தோனியின் புது காரில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இது 0-100 கிலோமீட்டரை 3.62 விநாடியில் அடையும் திறன் பெற்றுள்ளது.

View Photos
தோனியின் மனைவி இந்த காரின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்

நாடு, கிரிக்கெட்டிற்கு பிறகு தோனிக்கு பிடித்தது கார், பைக்குகள் தான். தற்போது இராணுவ பணியில் இருக்கும் தோனிக்கு வீடு திரும்பும் போது ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. புது ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் SUV தூனி வீட்டை அடைந்துள்ளது.

Welcome home #redbeast #trackhawk 6.2 Hemi ???? ! Your toy is finally here @mahi7781 really missing you ! Awaiting its citizenship as its the first n only car in India ! ????

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி இதனை குறித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் SUV இது தான் என்பது கூடுதல் தகவலாகும்.

jeep grand cherokee trackhawk

இந்த கார் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ் V8 HEMI இன்ஜின் பெற்றுள்ளது

2017 யில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் SUV காரானது 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ் V8 HEMI இன்ஜின் பெற்றுள்ளது. இந்த காரில் HEMI இன்ஜின் 707 bhp பவரையும் 875 Nm உட்ச டார்க்கையும் தருகிறது. இது 0-100 கிலோமீட்டரை 3.62 விநாடியில் அடையும் திறன் பெற்றுள்ளது.

jeep grand cherokee trackhawk front

இந்தியாவில் இந்த காரை தோனி தான் முதலில் வாங்கியுள்ளார்

இந்த அபார பவரை கட்டுபடுத்த 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் டிராண்ஸ்மிஷன் பெற்றுள்ளது ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக். 7 ஸ்லாட் கிரில் பெற்றுள்ளது இந்த கார். 20 இன்ச் அலாய் வீல், பல டெக்னிக்கல் தொழிற்நுட்பங்கள் பெற்று இந்த கார் அல்ட்ரா ஸ்டைலாக உள்ளது.

jeep grand cherokee trackhawk cabin

இந்த காரின் கேபின் பெரியதாக உள்ளது

0 Comments

8.4 இன்ச் தொடுதிரை பெற்றுள்ள இந்த காரில் நப்பா லெதர் சீட்கள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப கருப்பு அல்லது டார்க் ரூபி சிவப்பு நிறத்தில் இதனை பெறலாம். தோனி தனது ஜீப் கிராண்ட் செரோகி டிராக்ஹாக் SUV யில் என்ன மாற்றங்கள் செய்துள்ளார் என்பது தெரியவில்லை.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.