கனடாவில் வெடித்தது 'கோனா' எலக்ட்ரிக் கார் - அதிர்ச்சியில் ஹூண்டாய் நிறுவனம்!

கனடாவின் மாண்ட்ரேலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை விசாரிக்க ஹூண்டாய் நிறுவனம் துவங்கியுள்ளது.

View Photos
பியாரோ கோசெண்டினோ என்பவர் இந்த மார்ச் மாதம் ஹூண்டாய் கோனா காரை வாங்கியுள்ளார்

ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான கோனா வெடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மாண்ட்ரேலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை விசாரிக்க ஹூண்டாய் நிறுவனம் துவங்கியுள்ளது.

பியாரோ கோசெண்டினோ என்பவர் இந்த மார்ச் மாதம் ஹூண்டாய் கோனா காரை வாங்கியுள்ளார். அவர் தனது கரேஜில் ஹூண்டாய் கோனா காரை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது தான் இந்த கார் வெடித்துள்ளது. சார்ஜ் பாய்ண்டில் அந்த கார் இணைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.  

இது குறித்து ஹூண்டாய் கனடாவின் ஸ்போக்ஸ்பெர்சன் ஜின் பிராங்கோசிஸ் டெய்லர் கூறுகையில், ‘இந்த விபத்திற்கான காரணத்தை தீ அணைப்பு நிறுவனத்துடன் சேர்ந்து விசாரித்து வருகிறோம். எங்களது வாடிக்கையாளரின் நலம் தான் எங்களது முக்கியம். அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமையாகும்' என்றார்.

ivf3jr4o

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருவது எலக்ட்ரிக் கார்கள். டெஸ்லாவின் ரிப்போர்ட்டில் அவர்களது காரானது வெடிப்பது அல்லது தீ பிடிக்க வாய்ப்பானது சாதாரண காரை ஒப்பிடும் போது 8 முறை குறைவாகும். இருப்பினும் சாங்காயில் ஜனவரி மாதம் டெஸ்லா கார் தீ பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ljqhl6pg

இந்தியாவில் 25.30 லட்சம் ரூபாய்க்கு இது அறிமுகம் செய்யப்பட்டது

ஹூண்டாய் கோன கார் தீ பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் பல முரண்பட்ட கருத்துகள் வர துவங்கியுள்ளன. கனடாவில் நடந்த சம்பவத்தை ஹூண்டாய் மற்றும் திரான்ஸ்போர்ட் கனடா ஆகியவை விசாரித்து வருகிறது.

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹுஊண்டாய் கோனா காரானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்ல தகுந்த ஹூண்டாய் கோனா, 39.2 kWh லித்தியம்-ஐயன் பேட்டரி பெற்றுள்ளது. 100 kW எலக்ட்ரிக் மோட்டரானது 131 bhp மற்றும் 395 Nm டார்க்கையும் தரும். 9.7 விநாடிகளில் 0-100 கிலோமீட்டர் வரை செல்லும். முதல் வருட விற்பனையில் 500 யூனிட்களை விற்க திட்டமிட்டுள்ள ஹூண்டாய் கோனாவிற்கு தற்போது வரை 120 புக்கிங்கள் வந்துள்ளது.

0 Comments

Source: Automovie News Canada, Radio-Canada,

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.