வெயில் காலத்தில் உஷ்ணமாகிறதா கார் கேபின்; குளுகுளுவென வைத்துக்கொள்ள வழிகள்!

குறிப்பிட்ட இடைவேளையில் காரின் பாகங்களை சர்வீஸ் செய்தால், பெரிய செலவுகளை தவிர்க்கலாம்.

View Photos

இந்தியாவில் வெயில் காலம் துவங்கிவிட்டது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் வெப்பம் உள்ளது. வெளியே செல்ல வேண்டும் என்றாலே, பல மக்கள் காரையே நாடுகிறார்கள். இதனால் காரின் உள் கேபினின் வெப்பத்தை முடிந்த அளவு குறைவாகவே வைத்து கொள்ள வேண்டும். காரின் உள் கேபின் வெப்பத்தை குறைக்க சில டிப்ஸ்:

sr7s1tao

ஏசி பிள்டரை முடிந்த அளவு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்

ஏசி பிள்டரை சுத்தம் செய்தல்:

உள் கேபினின் வெப்பத்தை குறைக்க உதவுவது ஏசி ஆகும். ஏசியை சுத்தம் செய்து குறிப்பிட்ட இடைவேளையில் சர்வீஸ் செய்வதும் சிறந்ததே. காருக்கு நல்ல மைலேஜ் இருந்தால், ஏசி பிள்டரை மாற்றுவது நல்லது. ஏசியில் அழுக்கு சேர்தால், அது மாசடைந்த காற்றை தான் கேபினுக்குள் அனுப்பும். இது சுகாதாரமற்றது.

ஏசியை குறைந்த அளவில் (Low mode) ஆன் செய்ய வேண்டும்:

வெளி வெப்பத்தில் இருந்து காருக்குள் செல்கையில் ஏசியை முடிந்த அளவு அதிகமாக வைத்து ஆன் செய்யவே எண்ணுவோம். ஆனால் இது சிறந்ததல்ல. ஏசியை குறைந்த அளவில் வைத்து ஆன் செய்யும் போது தான் நமது உடல் வெப்பம் ஏசிக்கு ஏற்ப மாறும். மேலும் அதிக அளவில் வைத்து ஏசியை ஆன் செய்தால், ஏசி சிஸ்டம் பழுதாக அதிக வாய்ப்புள்ளது.

jqsol8r8

ரீ-சர்க்குலேசன் மோட் உபயோகிப்பது சிறந்தது

ரீ – சர்க்குலேசன் (Re – circulation) மோட் உயயோகிக்க வேண்டும்:

கேபின் போதியளவு குளிரான பிறகு ரீ – சர்க்குலேசன் மோட் ஆன் செய்தால், ஏசி வெளி காற்றை உபயோகிக்காமல் கேபினில் இருக்கும் காற்றையே மறு முறை உபயோகிக்கும். இதன் மூலம் கேபினை குளிராக வைக்கலாம்.

ஏசியை ஆப் (Off) செய்தல்:

இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை கண்டிப்பாக ஆப் செய்தாக வேண்டும். பேனை ஆப் செய்யாமல் இருக்க வேண்டும். இது, டிரை காற்றை வெளியேற்ற உதவும். மேலும் ஏசி ஆப் ஆகி சில நேரம் பிறகும் குளிர் காற்றை கேபினில் தங்க வைக்க இது உதவும்.

9d61u4uc

காரில் கூலண்ட் வைத்து கொள்வது நல்லது

கார் பாகங்களை கவனித்தல்:

குறிப்பிட்ட இடைவேளையில் காரின் பாகங்களை சர்வீஸ் செய்தால், பெரிய செலவுகளை தவிர்க்கலாம். காரின் கூலண்ட் அளவையும் கணக்கில் கொள்வது நல்லது. கேபினில் குடிநீர் வைத்து கொள்வது சிறப்பு. அது தக்க நேரத்தில் காரை டாப் அப் செய்யவும் உதவும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் காரின் கேபினில் கூலண்ட் வைத்து கொள்ள வேண்டும்.

re76p1bo

டெஸ்லாவில் நாய்களுக்கு தனி மோட் உள்ளது

குழந்தைகள் / செல்ல பிராணிகளை காரில் விட்டுவிடாமல் இருப்பது:

வெயிலில் காரை பார்க்கிங் செய்தால், காரில் உள் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால் காரில் குழந்தைகள் அல்லது செல்ல பிராணிகளை விட்டு செல்வது நல்லதல்ல. குழந்தைகளை காரில் விட்டு செல்ல நேர்ந்தாலும், ஏசி/பேனை ஆன் செய்து செல்ல வேண்டும்.

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.